உலகம்

200 நாடுகள் தேடியும் சிக்காமல் இருந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன்.. காதலியால் சிக்கியது எப்படி?

சமூக வலைதளத்தில் காதலி வெளியிட்ட புகைப்படத்தால் பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் போலிஸாரிடம் சிக்கியுள்ளார்.

200 நாடுகள் தேடியும் சிக்காமல் இருந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன்.. காதலியால் சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மெக்சிகோவை சேர்ந்தவர் டொனாசியானோ ஓல்குயின் பெர்டுகோ. பிரபல போதைப் பொருள் கடத்தல் மன்னனான இவரை 200க்கும் மேற்பட்ட நாடுகள் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளன. மேலும் 196 நாடுகள் அவரை கைது செய்வதற்கான இன்டர்போல் ரெட் வாரண்டை பிறப்பித்துள்ளன.

இப்படி உலக நாடுகளே தேடியும் சிக்காமல் போலிஸாருக்கு தண்ணி காட்டி வந்த டொனாசியானோ, அவரது நம்பிக்கைக்கு உரிய காதலி வெளியிட்ட ஒரே ஒரு புகைப்படத்தால் கையும் களவுமாக போலிஸாரிடம் சிக்கிக் கொண்டுள்ளார்.

கொலம்பிய நாட்டில் உள்ள கலியில் இருக்கும் மலை உச்சி பகுதியில் டோனாசியா தனது காதலியுடன் சொகுசு பங்களாவில் உற்காகமாக இருந்து வந்துள்ளார். அப்போது காதலர்கள் இருவரும் முத்தமிட்டு மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்.

இந்தப் புகைப்படத்தை அவரது காதலி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலிஸார், கொலம்பிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து உடனே கொலம்பிய அதிகாரிகள் தலைமறைவாக இருந்து சொகுசு பங்களாவிலேயே டொனாசியானோ ஓல்குயின் பெர்டுகோ கைது செய்துள்ளனர். இதையடுத்து அவரை தங்களது நாட்டிற்கு கொண்டுவர அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது.

banner

Related Stories

Related Stories