உலகம்

மீண்டும் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப்..? - கருத்துக்கணிப்பிலும் முன்னிலை! | #5in1_World

அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடலாம் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மீண்டும் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப்..? - கருத்துக்கணிப்பிலும் முன்னிலை! | #5in1_World
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

1) ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் பொதுத் தேர்தல்!

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. ஸ்காட் மோரிசன் பிரதமராக இருக்கும் கூட்டணி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்குமா அல்லது அந்தோணி அல்பானீஸ் தலைமையில், புதிதாக ஆஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கத்தை அமைக்குமா என்பதை தீர்மானிக்கும் தேர்தல் இதுவாகும். 2018ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவின் பிரதமராக ஸ்காட் மோரிசன் பதவி வகித்து வருகிறார். சிட்னியில் நடைபெற்ற ராயல் ஈஸ்டர் கண்காட்சியில் தொழிலாளர் கட்சித் தலைவர் அந்தோணி அல்பானீஸ், வாக்காளர்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

2) ரஷ்ய நாடாளுமன்ற டி.வி. சேனல் முடக்கம்!

ரஷ்ய நாடாளுமன்ற டி.வி. சேனல் முடக்கம் செய்து யூடியூப் நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ரஷ்ய நாடாளுமன்ற கீழவையின் நிகழ்வுகளை ஒளிபரப்பும் டுமா என்கிற டி.வி. சேனலை யூடியூப் நிறுவனம் முடக்கியுள்ளது. தங்கள் நிறுவனத்தின் விதிமுறைகளை மீறியதற்காக டி.வி. சேனல் முடக்கப்பட்டதாக யூடியூப் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. யூடியூப் நிறுவனம் ரஷ்யாவின் அரசு டி.வி. சேனல்கள் அனைத்தயைும் ஏற்கனவே முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப்..? - கருத்துக்கணிப்பிலும் முன்னிலை! | #5in1_World

3) பிரேசில் அதிபருக்கு எதிராகப் போராட்டம்

பிரேசிலில் எரிபொருள் விலை உயர்வு, வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு காரணமாக அந்நாட்டு அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோவுக்கு எதிராக நூற்றுக்கணக்கான மக்கள் கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் கோஷங்கள் எழுப்பினர். பணக்காரர்களுக்கான அரசாக இல்லாமல், சாமானியர்களுக்கான அரசாக பிரேசில் அரசாங்கம் செயல்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

4) பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி

பாகிஸ்தான் நாட்டில் ஷாஹீன் 3 என்கிற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை சோதனை இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளை அச்சுறுத்தவே என இணையத்தில் பலர் விவாதித்து வரும் நிலையில் இந்தியாவிடமும் பாகிஸ்தானுக்கு இணையாக ஏவுகணை மற்றும் ராக்கெட் பலன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

5) அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் - டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடலாம் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “நான் இப்போது அதிபராக இருந்திருந்தால், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்டு ரஷ்யாவை அச்சுறுத்தியிருப்பேன்” என்றார். இதற்கிடையே, இம்மாதம் முற்பகுதியில் ‘தி ஹில்ஸ்’ நடத்திய கருத்துக்கணிப்பில், 2024ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்தலில், தற்போதைய அதிபர் பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரை காட்டிலும், டொனால்டு டிரம்ப் முன்னிலையில் உள்ளார் என்று சுட்டிக்காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories