உலகம்

“பாகிஸ்தான் ராணுவம் கொடுத்த 3 ஆப்ஷன்கள்.. எனது உயிருக்கு ஆபத்து” : உண்மையை போட்டு உடைத்த இம்ரான் கான்!

தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

“பாகிஸ்தான் ராணுவம் கொடுத்த 3 ஆப்ஷன்கள்.. எனது உயிருக்கு ஆபத்து” : உண்மையை போட்டு உடைத்த இம்ரான் கான்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்த தீர்மானத்தின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ளது.

அதேவேளையில், இம்ரான் கான் அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துவிட்டது. மேலும் இம்ரான் கான் பதவியை ராஜினாமா செய்யவேண்டிய நிலை உருவாகியுள்ளது. மேலும் அடுத்த தேர்தலையும் அறிவிக்குமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், இம்ரான் கான் அளித்த பேட்டி ஒன்றில், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் அந்தப் பேட்டியில் கூறியிருப்பதாகவது, “எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. இதுகுறித்து நம்பகமான தகவல்கள் என்னிடம் உள்ளன. ஆனால் நான் அதற்காக பயப்படவில்லை. சுதந்திரமான, ஜனநாயக பாகிஸ்தானுக்காக தொடர்ந்து போராடுவேன்.

ராணுவம் எனக்கு 3 ஆப்ஷன்களை கொடுத்துள்ளது. நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எதிர்கொள்வது, முன்கூட்டியே தேர்தல் அல்லது ராஜினாமா செய்வது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories