உலகம்

தனது மனைவி உடலமைப்பை கிண்டல் செய்த சக நடிகரை ஆஸ்கர் மேடையிலேயே அறைந்த வில் ஸ்மித்!

சக நடிகரை ஆஸ்கர் மேடையிலேயே நடிகர் வில் ஸ்மித் அறைந்தது பார்வையாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

தனது மனைவி உடலமைப்பை கிண்டல் செய்த சக நடிகரை ஆஸ்கர் மேடையிலேயே அறைந்த வில் ஸ்மித்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் 2022 விருது விழா நடைபெற்றது. இதில் கிங் ரிச்சர்ட் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகர் வில் ஸ்மித்திற்கு சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.

முன்னதாக சிறந்த ஆவணப்படத்திற்காக விருதை வழங்கும்போது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக், வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித்தின் தலைமுடியைக் கிண்டலடித்து நகைச்சுவையாகப் பேசியுள்ளார்.

இதனால் கடுப்பான வில் ஸ்மித் உடனே மேடைக்கு சென்று கிறிஸ் ராக்கின் கண்ணத்தில் அறைந்தார். இதைப்பார்த்த சக நடிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இது நகைச்சுவைக்காக நடத்தப்பட்ட நாடகம் என முதலில் நினைத்துள்ளனர்.

ஆனால், வில் ஸ்மித் மேடையிலிருந்து தனது இருக்கைக்கு வந்த பிறகும், என் மனைவியின் பெயரை சொல்வதை நிறுத்துங்கள் என சத்தமாக கத்தி கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

வில் ஸ்மித் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித் அலோபீசியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் 2018ம் ஆண்டு அவர் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories