உலகம்

”பேப்பர் வாங்க காசு இல்லை; அதனால தேர்வும் இல்லை” - இது இலங்கையின் அவலம்!

”பேப்பர் வாங்க காசு இல்லை; அதனால தேர்வும் இல்லை” - இது இலங்கையின் அவலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா பரவல் காரணமாக உலகமே பொருளாதார சரிவை நோக்கி சென்று பின்னும் பல நாடுகள் மறுபடியும் மீண்டு எழுந்து வரும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் சுற்றுலாத் துறையை மட்டுமே நம்பியிருக்கும் இலங்கையால் மீண்டெழ முடியாத அவலை நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக அந்நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு வெகுவாக குறைந்து பண மதிப்பும் கிடுகிடுவென சரிந்துவிட்டது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதில் அந்நாட்டிற்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இலங்கையில் உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அனைத்தும் திடுதிப்பென உயர்ந்திருக்கிறது. இதனால் இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.254க்கும், அரிசி ஒரு கிலோ ரூ.448க்கும், ஒரு லிட்டர் பால் ரூ.263க்கும் ஒரு முட்டை ரூ.28க்கும் ஒரு ஆப்பிள் ரூ.150க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

”பேப்பர் வாங்க காசு இல்லை; அதனால தேர்வும் இல்லை” - இது இலங்கையின் அவலம்!

இதுபோக ஒரு பவுன் தங்கம் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. இப்படியாக அனைத்து வகையான பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்ததால் அடுத்து என்ன செய்வதென தெரியாமல் விழிபிதுங்கி போயிருக்கிறார் அதிபர் கோத்தபய ராஜபக்சே.

இந்த நிலையில் எதிர்வரும் மார்ச் 21ம் தேதி முதல் பள்ளி மாணாக்கர்களுக்கான பருவத் தேர்வுகள் நடைபெற இருந்த நிலையில் தற்போது அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஏனெனில், கடுமையான பொருளாதார சரிவு காரணமாக தேர்வுக்கு தேவையான தாள், மை உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதற்கு வேண்டிய அந்நிய செலாவணியை திரட்ட முடியாததால் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றனர். இதன் காரணமாக இலங்கையில் உள்ள 45 லட்ச மாணவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பாதிக்கப்படுவார்கள் என மதிப்பிடப்படுகிறது.

banner

Related Stories

Related Stories