உலகம்

“ஒரு ஆப்பிள் ₹150.. இனி எப்படி எங்களால் வாழ முடியும்”: இலங்கை அதிபர் மாளிகையில் வெடித்த மக்கள் போராட்டம்!

அதிபர் பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்சே விலகக் கோரி இலங்கை மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

“ஒரு ஆப்பிள் ₹150.. இனி எப்படி எங்களால் வாழ முடியும்”: இலங்கை அதிபர் மாளிகையில் வெடித்த மக்கள் போராட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இலங்கையில் கொரோனா தொற்றின் காரணமாக அந்நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்குப் பெரிய வருவாய் என்றால் அது சுற்றுலாத்துறைதான். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று நீடித்து வருவதால், சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாகக் குறைந்துவிட்டது.

இதனால், அந்நிய செலாவணி இருப்பு வெகுவாகக் குறைந்ததால் ரூபாயின் மதிப்பு வேகமாகச் சரிந்துவிட்டது. இதன் காரணமாக உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செல்வதில் அந்நாட்டிற்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதேபோல், கடந்த ஒருமாதமாக மின், எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.254க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் அரிசி ஒரு கிலோ ரூ.448க்கும், ஒரு லிட்டர் பால் ரூ.263க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதுவும் குறிக்காக ஒரு முட்டை ரூ.28க்கும் ஒரு ஆப்பிள் ரூ.150க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் எந்த ஒரு பொருளையும் வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இப்படியே விலை உயர்ந்து கொண்டே சென்றால், இந்த நாட்டில் எங்களால் வாழ முடியாது என கூறி அந்நாட்டு மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

“ஒரு ஆப்பிள் ₹150.. இனி எப்படி எங்களால் வாழ முடியும்”: இலங்கை அதிபர் மாளிகையில் வெடித்த மக்கள் போராட்டம்!

மேலும் கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் அடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து அதிபர் கோட்டாபய ராஜபக்சே உடனே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை இலங்கை முழுவதும் தற்போது எதிரொலித்து வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் மக்கள் வீதிக்கு வந்து போராடி வருகிறார்கள்.

இதனால் புத்தர்களின் பூமி தற்போது போராட்ட பூமியாக காட்சியளிக்கிறது. இப்படி உணவுப் பொருட்கள் முதல் தங்கம் வரை அனைத்து பொருட்களின் விலையும் கடுமையான உச்சத்தை எட்டி வருவதால் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே என்ன செய்வது என்று தெரியாமல் திணறி நிற்கிறார் என்று கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories