உலகம்

30 ஆண்டுகள் கழித்து ஆசிரியரை பழிவாங்கிய மாணவன்.. 101 முறை கத்தியால் குத்தி கொடூர கொலை : ‘பகீர்’ காரணம்!

வகுப்பறையில் அவமானப்படுத்திய ஆசிரியரை 30 ஆண்டுகள் கழித்து முன்னாள் மாணவர் கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

30 ஆண்டுகள் கழித்து ஆசிரியரை பழிவாங்கிய மாணவன்.. 101 முறை கத்தியால் குத்தி கொடூர கொலை : ‘பகீர்’ காரணம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் மரியா வெர்லிண்டன் ஆண்ட்வெர்பில். ஆசிரியரான இவர் தனது வீட்டில் கடந்த 2020ஆம் ஆண்டு மர்மமான முறையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இந்தக் கொலை சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் ஒரு வருடமாகியும் கொலையை யார் செய்தது என்பதை போலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து போலிஸாருக்கு இந்த வழக்கு ஒரு சவாலாக மாறியது.

இந்நிலையில், உவென்ட்ஸ் என்ற வாலிபர் தான்தான் அந்த ஆசிரியரைக் கொலை செய்ததாகத் தனது நண்பரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து அந்த நபர் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலிஸார் உடனே உவென்ட்ஸை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறிய வாக்குமூலத்தைக் கேட்டு போலிஸாரே அதிர்ச்சியடைந்தனர்.

1990ஆம் ஆண்டு உவென்ட்ஸ், பள்ளியில் படித்தபோது அவருக்கு ஆசிரியராக இருந்துள்ளார் கொலை செய்யப்பட்ட மரியா வெர்லிண்ட். இவர் ஒரு நாள் உவென்ட்ஸை அவமானப்படுத்தியுள்ளார். இதற்காக ஆசிரியரை பழிவாங்க வேண்டும் என முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவரது வீட்டிற்குச் சென்று ஆசிரியரைக் கத்தியால் 101 முறை குத்தி கொலை செய்துள்ளார். இந்த வாக்குமூலத்தை அடுத்து போலிஸார் அவரை கைது செய்தனர். 30 ஆண்டுகள் கழித்து பாடம் எடுத்த ஆசிரியரை முன்னாள் மாணவர் கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories