உலகம்

“புதின் ஒரு சைக்கோ” - ரஷ்ய அதிபரை விமர்சித்த மாடல் அழகி சூட்கேசில் சடலமாக மீட்பு : வெளிவந்த பகீர் தகவல்!

ரஷ்ய அதிபர் புதினை விமர்சித்த பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“புதின் ஒரு சைக்கோ” - ரஷ்ய அதிபரை விமர்சித்த மாடல் அழகி சூட்கேசில் சடலமாக மீட்பு : வெளிவந்த பகீர் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ரஷ்யாவைச் சேர்ந்தவர் பிரபல மாடல் கிரெட்டா வெட்லர் (23). இவர் சமூக வலைதளங்களில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். இவர் கடந்த ஆண்டு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை “சைக்கோ’ என்று அதாவது மனநலம் பாதிக்கப்பட்டவர் என கடுமையாக விமர்சித்தார்.

இதனையடுத்து அடுத்து சில மாதங்களிலேயே சமூக வலைதளங்களில் எந்தவொரு பதிவும் போடாமல் சத்தமே இல்லாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது, புதினே கைது செய்து சிறையில் அடைத்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் கடந்த வாரம் அடையாளம் தெரியாத சூட்கேஸில் சடலம் ஒன்று கிடப்பதாக ரஷ்ய போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலிஸார் விரைந்து சென்று சடலத்தை மீட்டபோது, அது கிரெட்டா வெட்லர் எனத் தெரியவந்தது. மேலும் கொலை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் இருப்பதாகவும் விசாரணையில் தெரியவர, பலரும் அதிபர் மீது சந்தேகங்கள் இருப்பதாகக் கூறி, வதந்தியை பரப்பி வந்தனர்.

இதனையடுத்து போலிஸார் விசாரணை நடத்திய நிலையில், கிரெட்டா வெட்லர் காதலர் டிமிட்ரி கொரோ போலிஸில் சரண் அடைந்தார். அப்போது தான் தான் கருத்து வேறுபட்டால் கொலை செய்யதாகவும், பின்னர் அவரது உடலை சூட்கேஸில் வைத்து விட்டு அதனுடன் மூன்று நாள் தங்கியிருந்தாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories