தமிழ்நாடு

பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்க தான் ஆட்சி நடத்துகிறாரா Dummy CM? : உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

பச்சைப்பொய் சொல்லி வந்த இந்த கையாலாகா ஆட்சியாளர்களின் முகத்தில் கரி பூசி இருக்கிறது இன்றைய The Hindu நாளிதழ் செய்தி.

பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்க தான் ஆட்சி நடத்துகிறாரா Dummy CM? : உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு த.வெ.க., சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், செல்போனில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதுடன், இரவில் ஆட்சியர் வீட்டுக்கே நேரில் சென்று தொந்தரவு செய்ததாக புகார் எழுந்தது.

இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், அரசியல் கட்சிகள், மகளிர் அமைப்புகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் புகார் அளித்துள்ளதாக 'தி இந்து' நாளேட்டில் இன்று செய்தி வெளியாகியிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து, ஆளுங்கட்சியின் பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்க தான் ஆட்சி நடத்துகிறாரா Dummy CM? என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதளபதிவில் ”கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுங்கட்சி MLA அருள் விக்னேஷ் ஆபாச Message-ஏ அனுப்பவில்லை என்று பச்சைப்பொய் சொல்லி வந்த இந்த கையாலாகா ஆட்சியாளர்களின் முகத்தில் கரி பூசி இருக்கிறது இன்றைய The Hindu நாளிதழ் செய்தி.

இந்த சம்பவத்தில் ஒரு மாதம் முன்பே தலைமைச் செயலாளரிடம் தொலைபேசி வாயிலாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் புகார் அளித்த நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதுமட்டுமின்றி, ஆட்சியரிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை என்று உயர் நீதிமன்றத்திலேயே இந்த அரசு நேற்று பொய் சொல்லியிருக்கிறது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர், தலைமைச் செயலாளரிடம் தொலைபேசியில் புகார் அளித்துள்ளார் என்பது முதலமைச்சருக்கு தெரியாதா?

அதை முதலமைச்சரிடம் தலைமைச் செயலாளர் மறைத்தாரா? அல்லது அது தெரிந்தும் எம்.எல்.ஏ- வையும் தனது அரசையும் காப்பாற்றுவதற்காக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லையா?

இதில் எது உண்மை என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.

ஒருவேளை அந்த செய்தி மறைக்கப்பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட ஆட்சியருக்கு துணையாக நிற்காமல், குற்றத்தை மறைத்து, குற்றவாளியை பாதுகாக்க துணை போன தலைமைச் செயலாளர், பொது துறை செயலாளர், முதலமைச்சர் அலுவலக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும், முதலமைச்சர் உடனே விடுப்பில் அனுப்ப வேண்டும்.

அப்போது தான், இந்த புகாரின் மீது நியாயமான முறையில் விசாரணை நடைபெறும்.

இந்த சம்பவத்தில் இனியும் தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட MLA-வை உடனே கைது செய்து விசாரிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories