உலகம்

ரஷ்யா கண்ணில் மண்ணைத் தூவி Starlink டெர்மினல்களை உக்ரைனுக்கு அனுப்பிய எலான் மஸ்க்- வியக்கும் உலக நாடுகள்!

ஷ்ய படையினரின் அதிரடி சோதனைகளைக் கடந்து ஸ்டார் லிங்க் டெர்மினல் சாதனங்களை பழைய லாரி மூலம் உக்ரைனுக்கு அனுப்பி வைத்துள்ளார் எலான் மஸ்க்.

ரஷ்யா கண்ணில் மண்ணைத் தூவி Starlink டெர்மினல்களை உக்ரைனுக்கு அனுப்பிய எலான் மஸ்க்- வியக்கும் உலக நாடுகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24-ஆம் தேதி போர் தொடுத்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ படையில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷ்யா போரைத் தொடங்கியது.

ரஷ்ய ராணுவம் நடத்திய தொடர் தாக்குதலால் உக்ரைனின் முக்கிய நகரங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. மக்கள் மெட்ரோ ரெயில் நிலைய சுரங்கப்பாதைகள், பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

மேலும் தொலைத் தொடர்பு சாதனங்களும் ரஷ்ய படையினரால் துவம்சம் செய்யப்பட்டுவிட்டதால் மக்கள் போனில் பேசவும் இணையதளத்தைப் பயன்படுத்தவும் முடியாமல் தவிக்கின்றனர். தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இணைய சேவை பெருமளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உக்ரைன் நாட்டின் துணை பிரதமர் மைக்கைலோ ஃபெடோரோவ், எலான் மஸ்கிடம் இணையதள சேவை குறித்து உதவி கேட்டார். இதையடுத்து உலக பணக்காரரான எலான் மஸ்க் உக்ரைனுக்கு உதவ முன்வந்தார்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உயர்தொழில்நுட்ப ஸ்டார் லிங்க் டெர்மினல் சாதனங்களை உக்ரைனைக்கு அனுப்பி வைத்தார் எலான் மஸ்க். ரஷ்ய படையினரின் அதிரடி சோதனைகளைக் கடந்து ஸ்டார் லிங்க் டெர்மினல் சாதனங்களை பழைய லாரி மூலம் உக்ரைனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதை தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் எலான் மஸ்க் உறுதிப்படுத்தியுள்ளார். உக்ரைன் துணை பிரதமர் உதவி கேட்ட 10 மணி நேரத்தில் இந்த சேவையை வழங்கியுள்ளார் எலான் மஸ்க்.

ரஷ்யாவின் தீவிர கண்காணிப்பையும், தாக்குதலையும் மீறி உக்ரைனுக்கு எலான் மஸ்க் செய்த இந்த உதவி தொழில்நுட்ப உலகில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

banner

Related Stories

Related Stories