உலகம்

”இந்த நேரத்துல நான் இருந்துருக்கனும்..” - ரஷ்யாவின் படையெடுப்புக்கு இடையே பரபரப்பை கிளப்பிய ட்ரம்ப்!

அமெரிக்கா பலவீனமான அதிபரை கொண்டிருக்கும் போது உலகம் ஆபத்தை சந்திக்கிறது என ஜோ பைடனை விமர்சித்திருந்தார் ட்ரம்ப்.

”இந்த நேரத்துல நான் இருந்துருக்கனும்..” - ரஷ்யாவின் படையெடுப்புக்கு இடையே பரபரப்பை கிளப்பிய ட்ரம்ப்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலக நாடுகள் அனைத்தும் தற்போது உற்று நோக்கிக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் என்றால் அது ரஷ்யா-உக்ரைன் இடையே நடக்கும் போர் நடவடிக்கைதான்.

நேட்டோ நாடுகளுக்கான அமைப்பில் உக்ரைன் சேரும் எண்ணத்தை எதிர்த்ததோடு, அந்நாட்டின் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கெனவே கொரோனா காரணமாக உலகின் பொருளாதாரம் சரிந்து வந்த நிலையில் தற்போது ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தால் பொருளாதார நிலை மேலும் சீர்குலையும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறது. ஆகவே உக்ரைன் மீதான நடவடிக்கையை ரஷ்யா நிறுத்த வேண்டும் என பல நாட்டுத் தலைவர்களும் கோரி வருகின்றனர்.

இப்படி இருக்கையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் உக்ரைன் - ரஷ்ய விவகாரம் குறித்து ஃப்ளோரிடாவில் நடந்த அரசியல் மாநாட்டின் போது பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில், அமெரிக்கா பலவீனமான அதிபரை கொண்டிருக்கும் போது உலகம் ஆபத்தை சந்திக்கிறது என ஜோ பைடனை விமர்சித்திருந்தார் ட்ரம்ப். மேலும், ரஷ்ய அதிபர் புதின் புத்திசாலிதான் அதில் சந்தேகமில்லை.

ஆனால் உலகில் உள்ள தலைவர்கள் எல்லாம் ஊமையாகவே இருக்கிறார்கள். பைடனை புதின் ஒரு ட்ரம்ப் கார்டு போல விளையாடிக் கொண்டிருக்கிறார். கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்கெனவே பணக்காரராக இருக்கும் புதின் மேலும் பணக்காரராகப் போகிறார்.

நான் அதிபராக இருந்திருந்தால் இந்த சூழலே ஏற்பட்டிருக்காது. அமெரிக்காவில் புஷ் அதிபராக இருந்தபோது ரஷ்யா ஜார்ஜியாவை ஆக்கிரமித்தது, ஒபாமா ஆட்சியின் போது க்ரீமியாவையும் ஆக்கிரமித்தது.

தற்போது பைடன் ஆட்சியின் கீழ் உக்ரைனை ஆக்கிரமிக்கிறது ரஷ்யா. ஆனால், என்னுடைய ஆட்சியின் போது ரஷ்யா எந்த நாட்டின் மீது படையெடுக்கவில்லை” என டொனால்ட் ட்ரம்ப் பேசியிருந்தார்.

banner

Related Stories

Related Stories