உலகம்

72 மணி நேரத்தில் உக்ரைனை கைப்பற்ற புதின் போட்ட மாஸ்டர் ப்ளான்: ரத்தம் உறைய வைக்கும் திட்டம் - பகீர் தகவல்

ரஷ்யாவின் ரத்தம் உறைய வைக்கும் உண்மை திட்டத்தை அமெரிக்காவின் செனட் புலனாய்வுக் குழுவின் துணைத் தலைவர், மார்கோ ரூபியோ அம்பலப்படுத்தியுள்ளார்.

72 மணி நேரத்தில் உக்ரைனை கைப்பற்ற புதின் போட்ட மாஸ்டர் ப்ளான்: ரத்தம் உறைய வைக்கும் திட்டம் - பகீர் தகவல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன்தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது.

குறிப்பாக, கடந்த 24ம் தேதி ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடங்கியது. ரஷ்ய அதிபர் தொலைக்காட்சியில் தோன்றி உக்ரைன் மீதான போர் அறிவிப்பை வெளியிட்டதையடுத்து உக்ரைன் மீது ரஷ்ய நாட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருவதை. ரஷ்ய விமானப் படை விமானங்கள் உக்ரைனுக்குள் சென்று வான்வழி தாக்குதலை நடத்தியது.

அங்குள்ள விமானத்தளங்கள் மற்றும் வான் பாதுகாப்புத் தளங்களையும் தாக்கியது. பதிலுக்கு உக்ரைன் ராணுவம், ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்தினார்கள். இரு நாடுகளுக்கும் இடையே முதல் நாளிலேயே கடும் போர் நடந்தது. பெரும் அழிவை

ரஷ்யா போர் விமானங்கள் உக்ரைனில் உள்ள முக்கிய பகுதிகளை தாக்கி அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இதனால் போர் தொடங்கிய முதல் நாளிலேயே உக்ரைன் பெரும் அழிவை சந்தித்தது. ஏவுகணைகள் மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டதால் சேதம் அதிகமாகக் காணப்பட்டது. துல்லிய ஆயுதங்கள் மூலம் விமான தளங்களையும் வான் பாதுகாப்பு அமைப்புகளையும் அழித்துவிட்டதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

72 மணி நேரத்தில் உக்ரைனை கைப்பற்ற புதின் போட்ட மாஸ்டர் ப்ளான்: ரத்தம் உறைய வைக்கும் திட்டம் - பகீர் தகவல்

ரஷ்யாவின் அதிரடி தாக்குதலில் உக்ரைனை சேர்ந்த ஏராளமான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட தகவல்கள் வெளியாகி வருகிறது. உக்ரைன் ராணுவம் தரப்பில் 40 பேர், பொதுமக்களில் 10 பேர் இறந்ததாகவும், ரஷ்ய கிளர்ச்சி படையைச்சேர்ந்த 100 பேரை உக்ரைன் ராணுவம் சுட்டுக்கொன் றதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்தது.

இடைவிடாமல் வான் தாக்குதலுக்குப் பிறகு, ரஷ்ய படைகள் தலைநகர் கீவில் நுழைந்தன. கீவ் நகரின் வடக்கு பகுதியில் ரஷ்ய படைகள் புகுந்து தாக்குதல் நடத்தியபடியே முன்னேறி செல்கின்றன. உக்ரைன் நாட்டின் போர் விமானத்தையும் ரஷ்ய படை சுட்டுவீழ்த்திய தாகவும் இதில் 5 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைன் நாட்டின் விமானத்தளங்கள், வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்புகளை அழித்து விட்டதாக ரஷ்யா தகவல் தெரிவித் துள்ளது. ஐ.நா மற்றும் உலக நாடுகளின் கோரிக்கையை புறந்தள்ளிய ரஷ்யா, கடந்த பல மணி நேரமாக உக்ரை னில் முழு அளவிலான தாக்குதலை நடத்தி வருகிறது. அது தொடர்பான காட்சிகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து தப்பிக்க உக்ரைனில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைகளில் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், ரஷ்யாவின் ரத்தம் உறைய வைக்கும் உண்மை திட்டத்தை அமெரிக்காவின் செனட் புலனாய்வுக் குழுவின் துணைத் தலைவர், மார்கோ ரூபியோ அம்பலப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, அமெரிக்க செனட் புலனாய்வுக் குழுவின் துணைத் தலைவர், மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள தகவலில், ரஷ்யாவின் ஆதிக்கத்தை உக்ரைனில் செலுத்துவதற்கு சில போர் தந்திரங்களை வகுத்திருந்தது. அதன்படி, போர் அறிவிப்பு வெளியான அடுத்த 24 மணி நேரத்தில் வான்வழி ஆதிக்கத்தைக் கைப்பற்றுவது என முதல் திட்டம்.

அடுத்ததாக, 36 மணி நேரத்திற்குள் உக்ரைனின் இராணுவ தகவல் தொடர்புகளை அழித்து அதனை கைப்பற்றுவதும், 48 மணி நேரத்திற்குள் தலைநகர் Kyiv-வை சுற்றி வளைத்து, 72 மணி நேரத்திற்குள் 'பொம்மை அரசாங்கத்தை' நிறுவ, புடினின் திட்டமாக இருந்தது.

ஆனால் இந்த 4 திட்டமும் தோல்விலேயே முடிந்தது. அவரால் திட்டத்தை அடைய முடியவில்லை, ரஷ்ய இராணுவத் தலைவர்கள் தாங்கள் 'சமீபத்தில் பெற்ற' உத்தரவுகளைப் பின்பற்றுவதற்கு முன், மிகக் கவனமாக சிந்திக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories