உலகம்

4 நாளிலேயே அகதிகளான 3.68 லட்சம் உக்ரைன் மக்கள்: தீவிரமடையும் உக்ரைன் - ரஷ்யா போர்!

உக்ரைனில் இருந்து 3.68 லட்சம் பேர் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா அகதிகள் முகமை தெரிவித்துள்ளது.

4 நாளிலேயே அகதிகளான 3.68 லட்சம் உக்ரைன் மக்கள்: தீவிரமடையும் உக்ரைன் - ரஷ்யா போர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் 4வது நாளாகத் தாக்குதல் தொடுத்துவருகிறது. இதன்காரனமாக உக்ரைன் மக்கள் கண்ணீருடன் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

மேலும் தொடர் குண்டு சத்தம் கேட்டுக்கொண்டே இருப்பதால் உக்ரைன் மக்கள் மெட்ரோ ரயில்நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.ரஷ்யாவுடனான போரில் இதுவரை 4300 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என உக்ரைனின் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மல்யார் தெரிவித்துள்ளார்

உக்ரைனில் உள்ள கீவ், கார்கிவ், சும நகரங்களில் சண்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதனால் அப்பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து ரஷ்யாவின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஒப்புக்கொண்டுள்ளார். இதன் காரணமாக விரைவில் உக்ரைன் ரஷ்ய அதிகாரிகள் பெலாரஸில் பேச்சு வார்த்தையில் ஈடுபட உள்ளனர். இதில் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்திக்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த போர் காரணமாக உக்ரைன் நாட்டிலிருந்து 3.68 லட்சம் பேர் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா அதிகாரிகள் முகாமை தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories