உலகம்

வாட்ஸ் அப் பயனர்களே உஷார்... இனி ஹார்ட் விட்டால் 5 ஆண்டு சிறை ; 60 லட்சம் அபராதம் - எங்கு தெரியுமா?

வாட்ஸ் அப் பயனர்களே உஷார்... இனி ஹார்ட் விட்டால் 5 ஆண்டு சிறை ; 60 லட்சம் அபராதம் - எங்கு தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இணையத்தின் மூலம் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதால் அதனை தடுக்கும் வகையில் சவுதி அரேபியாவில் புதிய கட்டுப்பாடு ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வாட்ஸ் அப் செயலியில் சிவப்பு நிற இதய குறியீடான heart emoji அனுப்பி பாலியல் ரீதியாக எவரேனும் தொந்தரவு செய்தால் அந்த நபருக்கு இரண்டு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி நாட்டு சட்டப்படி ஹார்டின் இமோஜியை அனுப்பி தொந்தரவு செய்வதாக புகார்கள் மீது விசாரிக்கப்பட்டு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அந்த குற்றவாளிக்கு 2 முதல் 5 ஆண்டுகள் சிறை தண்டனையோ அல்லது 1 லட்சம் சவுதி ரியால் அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு மோசடி தடுப்பு சங்கத்தின் உறுப்பினரான அல் மோடாஸ் குட்பி கூறியுள்ளார்.

மேலும் அனுமதியின்றி உரையாடலை தொடங்கினாலும் பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரிகளிடம் புகாரளிக்கலாம் என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறுஞ்செய்தி அனுப்பியவரே பொறுப்பேற்க வேண்டும் எனவும், தெரிவித்துள்ள அவர், திரும்ப திரும்ப இதே தவறை செய்தால் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையுடன் 3 லட்சம் சவுதி ரியால் (இந்திய மதிப்பில் 20 முதல் 60 லட்சம் ரூபாய்க்கு மேல்) அபராதமும் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories