உலகம்

கொத்து கொத்தாக சாலையில் மயங்கி விழுந்த ‘மஞ்சள் தலை பறவைகள்’ : மெக்சிகோவில் பகீர் சம்பவம் - நடந்தது என்ன?

மெக்சிகோ நாட்டில் வானிலிருந்து கீழே விழுந்து பறவைகள் கொத்து கொத்தாக உயிரிழந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொத்து கொத்தாக சாலையில் மயங்கி விழுந்த ‘மஞ்சள் தலை பறவைகள்’ :  மெக்சிகோவில் பகீர் சம்பவம் - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மொக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் உள்ளது அல்வரோ ஆப்ரெகான் என்ற பகுதி. இங்கு வானில் பறந்து கொண்டிருந்த பறவைகள் திடீரென கொத்து கொத்தாகக் கீழே விழுந்து உயிரிழந்தன.

இதைப்பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் பறந்து கொண்டிருந்த பறவைகள் எப்படி கீழே விழுந்து உயிரிழந்த என்று தெரியாததால் அவர்கள் பீதியடைந்தனர். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் மஞ்சள் தலை கொண்ட இந்த அரிய பறவைகள் இடம்பெயர்ந்து சென்றபோதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் தொழிற்சாலை ஒன்றி இருந்து வெளியேறிய நச்சு வாயு காரணமாகப் பறவைகள் உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் உயர் மின் அழுத்தக் கம்பியில் பறவைகள் உரசியதால் கூட இப்படி நடந்திருக்கலாம் எனவும் அப்பகுதி போலிஸார் தெரிவித்துள்ளார். இதேபோன்று ஒரு சம்பவம் இந்தியாவின் குஜராத் மாநிலம் சூரத்தில் அண்மையில் நடந்தது.

பறவைகள் இடம்பெயர்ந்து சென்றபோது உயரமான கட்டிடத்தின் கண்ணாடியின் மீது மோதி பறவைகள் உயிரிழந்தன. "இப்படி உலகம் முழுவதும் இயற்கைக்கு எதிராக ஏற்பட்டுள்ள மாற்றங்களே தற்போது பறவைகளுக்கு ஆபத்தாக வந்து நிற்கிறது" என பறவைகள் நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories