வைரல்

வானிலிருந்து கொத்துக் கொத்தாக விழுந்த அரியவகை பறவைகள்.. சூரத் நகரில் பகீர் சம்பவம் - என்ன காரணம்?

குஜராத் மாநிலம் சூரத் நகரில் பறவைகள் திடீரென மயங்கி கீழே கொத்துக் கொத்தாக விழுந்து உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வானிலிருந்து கொத்துக் கொத்தாக விழுந்த அரியவகை பறவைகள்.. சூரத் நகரில் பகீர் சம்பவம் - என்ன காரணம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

குஜராத் மாநிலம் சூரத் நகரில் பறவைகள் திடீரென மயங்கி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பறவைகள் ஒரேநேரத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக வெளியான வீடியோ ஒன்றில், பறவைகள் பகல் பொழுதில் வானத்தில் இருந்து கீழே விழுந்து உயிர் துடிக்கத்துடிக்க இறந்து போயின. முதலில் செல்போன் டவர்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு காரணமாக இறந்திருக்கலாம் என சந்திக்கப்பட்டது. ஆனால், அதுகுறித்த உண்மை நிலவரங்களை பறவைகள் நல ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்தப்பறவைகள் ரோஸ் ஸ்டார்லிங் வகையைச் சேர்ந்தவையாகும். ஆண்டுதோறும் பனிக்காலத்தில் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து இந்தியாவிற்கு வரும் இந்த பறவைகள் இந்தியாவின் பல பகுதியில், வலசை சென்று பல மாநிலங்களில் சுற்றிவிட்டு மீண்டும் தாயகம் திரும்பும்.

அந்தவகையில், குஜராத் பகுதியில் தனது வலசைப் பாதையில் பயணித்த பறவைகள்தான் தற்போது உயிரிழந்துள்ளன. பொதுவாக, தங்களது வழக்கமான வலசைப் பாதையை நினைவில் வைத்து பறக்கும் பறவைகள் குறுக்கிடும் கட்டிடங்களை அறிந்துகொள்ளும் திறன் உடையவைதான்.

ஆனால் தற்போது நடந்த இந்த சம்பவத்தில், சூரத் நகரில் உள்ள அம்மாவட்ட கூட்டுறவு வங்கியின் கட்டிடம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்டிடத்தில் முன் பகுதியில் கண்ணாடிகள் பதிக்கப்பட்டுள்ளது.

வானிலிருந்து கொத்துக் கொத்தாக விழுந்த அரியவகை பறவைகள்.. சூரத் நகரில் பகீர் சம்பவம் - என்ன காரணம்?

இதனை உணரமுடியாத பறவைகள், குறுக்கே இருந்த கண்ணாடிகளுள் வானம் மற்றும் மேகமூட்டங்கள் பரதிபலிக்கவே இதுவும் வானத்தின் பரப்புதான் என நினைத்து பறக்க எத்தனிக்கும்போது கண்ணாடி கட்டிடத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தை தொடர்ந்து அந்த கண்ணாடி கட்டிடத்தை வண்ணங்கள் பூசி மறைக்கவேண்டும் என பறவைகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories