உலகம்

படிக்கப் போறனு சொல்லி கேரள வாலிபர் செய்த காரியம் : லண்டன் போலிஸ் வசம் சிக்கியது எப்படி?

மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்றவர் சிறுமிகளை குறிவைத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளது விசாரணையின் மூலம் அம்பலம்.

படிக்கப் போறனு சொல்லி கேரள வாலிபர் செய்த காரியம் : லண்டன் போலிஸ் வசம் சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

14 வயதுக்கும் மேற்பட்ட சிறுமிகளை குறி வைத்த் பாலியல் தொந்தரவு கொடுக்கப்படுவதாக லண்டன் போலிஸாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

அதனை அடிப்படையாகக் கொண்டு தீவிர விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள் லண்டன் போலிஸார். அப்போது, சமூக வலைதளங்கள் மூலம் இந்த செயலை செய்வதை வாடிக்கையாக வைத்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

இதனையடுத்து மேற்குறிப்பிட்ட சிறுமிகளை பாலியல் ரீதியில் அணுகுவோரை சைபர் க்ரைம் போலிஸாரின் உதவியுடன் கண்காணித்து வந்திருக்கிறார்கள்.

அதன்படி, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிறுமிகளை சீரழிக்கும் வேலையில் ஈடுபட்டது கேரளாவின் கோட்டையத்தில் இருந்து மேற்படிப்புக்காக லண்டன் வந்த இளைஞர் என்பது தெரிய வந்திருக்கிறது.

உடனடியாக போலியாக ஒரு சமூக வலைதள கணக்கை தொடங்கி அதன் மூலம் அந்த நபரை தொடர்புகொண்டு ஹோட்டல் ஒன்றுக்கு வரவைத்திருக்கிறார்கள்.

அப்போது சிறுமி இருப்பார் என பார்த்தால் போலிஸார் இருந்திருக்கிறார்கள். அவர்களை கண்டு அஞ்சு நடுங்கி ஓட முயற்சித்த போது அந்த இளைஞனை லண்டன் போலிஸார் மடக்கி பிடித்திருக்கிறார்கள்.

பின்னர் போலிஸாரிடம் தெரியாமல் ஆசையில் தவறு செய்துவிட்டதாகவும், இனி இப்படி நடக்காது என்றும் கூறி கதறியிருக்கிறார் அந்த இளைஞர். அதனைக் கண்டுக்கொள்ளாத லண்டன் போலிஸார் இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

தீவிர விசாரணைக்கு பின்னரே இந்தியாவுக்கு அனுப்பப்படும் என்றும் கூறியிருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories