உலகம்

“உக்ரைனை ரஷ்யா தொட்டால் 50,000 பேர் பலியாவார்கள்..” : மிரட்டல் விடுத்த அமெரிக்கா - பின்னணி என்ன?

உக்ரைனை ரஷ்யா தொட்டால் 50,000 மனித இழப்பை சந்திக்க நேரிடும் என ரஷ்யாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

“உக்ரைனை ரஷ்யா தொட்டால்  50,000 பேர் பலியாவார்கள்..” :  மிரட்டல் விடுத்த அமெரிக்கா - பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலகம் முழுவதும் கொரோனா சூழல் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல கோடி பேர் பாதிக்கப்பட்ட நிலையில், பல லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தச் சூழலில் வல்லரசு அமெரிக்கா தனது நேட்டோ படைகள் மூலம் சீனா, ரஷ்யா மற்றும் வட கொரியா போன்ற நாடுகளுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறது.

சோவியத் யூனியன் தகர்ந்த பிறகு முன்னாள் சோவியத் நாடுகளில், அமெரிக்காவோ அல்லது நேட்டோவோ விஸ்தரிக்கக் கூடாது என்ற நிபந்தனையை நேட்டோ ஏற்கெனவே ஏற்றுக்கொண்டதாக ரஷ்யா தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், தற்போது, உக்ரைனில் அமெரிக்கா தனது படைகளை மிகப்பெரிய அளவில் திரட்டி வருகிறது. 1922ல் சோவியத் சோசலிச குடியரசு உருவானபோது உக்ரைன் நாடு உருவானது. அதன்பின்னர் சோவியத் யூனியன் கலைந்தபிறகு உக்ரைன் நாடும் பிரிந்தது. ஆனாலும், தற்போது உக்ரைனில் அதிகபடியான ரஷ்ய மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் ரஷ்யாவிற்கு அச்சுறுத்தல் கொடுக்க உக்ரைனில் தனது ராணுவ பலத்தை அமெரிக்கா நிறுவி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ரஷ்யாவும் உக்ரைன் எல்லையில் தனது இராணுவத்தை தொடர்ந்து குவித்து வருகிறது. இதனால் இருநாட்டு எல்லையிலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவின் இந்தச் செயலுக்கு அமெரிக்காவின் ஆதரவு நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ஐ.நா பாதுகாப்பு சபையில் பேசிய அமெரிக்காவின் பாதுக்காப்புத்துறை பிரதிநிதி, “உக்ரைன் மீது ரஷ்யா போர்த் தொடுத்தால், நிச்சயம் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்” எனத் தெரிவித்தார். அமெரிக்காவின் நடவடிக்கையே எங்களை போர்ச் சூழலுக்கு தள்ளுவதாக ரஷ்யாவின் ராணுவ அதிகாரிகள் பதிலளித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, ரஷ்யாவின் செயல்கள் குறித்து பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், தற்போது உள்ள சூழலில் உக்ரைனை ரஷ்யா தொட்டால் அதிக மனித இழப்பை சந்திக்க நேரிடும். எங்கள் படைகளின் பதிலடி மூலம் ரஷ்யாவிற்கு அதிகப்படியான இராணுவ இழப்பு ஏற்படும். குறிப்பாக உக்ரைனின் தலைநகரை ரஷ்யா கைப்பற்றுமாயின் 50 ஆயிரம் உயிரிழப்பு ஏற்படும்” என எச்சரித்துப் பேசியுள்ளார்.

அமெரிக்காவின் இத்தகைய பேச்சு போர் சூழலை ஏற்படுத்துவதாக உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

banner

Related Stories

Related Stories