உலகம்

”காதலியின் படுக்கையறையால் பில்லியனரான பிரிட்டன் இளைஞர்” - ஊரடங்கால் நடந்த சாதனை!

காதலியின் படுக்கை அறையில் இருந்தபடியே பிரிட்டனின் இளம் கோடிஸ்வராராகியிருக்கிறார் 27 வயதே ஆன இளைஞர்.

”காதலியின் படுக்கையறையால் பில்லியனரான பிரிட்டன் இளைஞர்” - ஊரடங்கால் நடந்த சாதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிரிட்டன் நாட்டின் பணக்காரர் பட்டியலில் 113வது இடத்தை பிடித்துள்ளார் லண்டனைச் சேர்ந்த ஜானி பஃர்பர்ஹாட். 27 வயதான இந்த இளைஞர் தற்போது 150 பில்லியன் (15,000 கோடி) சொத்துகளுக்கு சொந்தக்காரர் ஆவார்.

பிரிட்டிஷ் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வலம் வருகிறார் இளம் பணக்காரரான ஜானி. ஏனெனின் தன்னுடைய Hopin செயலியின் பங்குகளை விற்றதன் மூலம் 10 பில்லியன் அதாவது இந்திய மதிப்பில் 1000 கோடி ரூபாய் ஈட்டியுள்ளார் ஜானி.

ஜானியின் இமாலய வளர்ச்சிக்கு அவரது காதலியின் படுக்கையறை பெரும் பங்காற்றியுள்ளது எனக் கூறினால் மிகையாகது. 2018ம் ஆண்டு ஜானி தனது Hopin செயலிக்கான வேலைகளை தொடங்கியிருந்தாலும் அதனை தொடர்ந்து செயல்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட போதிய நிதி இல்லாததால் தற்காலிகமாக கிடப்பில் போட்டிருந்தார்.

”காதலியின் படுக்கையறையால் பில்லியனரான பிரிட்டன் இளைஞர்” - ஊரடங்கால் நடந்த சாதனை!

அதன்பிறகு 2019ம் ஆண்டு தொடங்கி Hopin செயலியை அறிமுகப்படும் பணிகளில் இறங்கினார் ஜானி. Zoom call செயலிக்கு இணையான செயலியாக HOPIN இருக்கும். ஹோபின் மூலம் ரிமோட் நெட்வொர்க்கிங் முறையில் வீடியோ கான்ஃப்ரன்ஸில் பேசும் வசதியை ஏற்படுத்தினார். மேலும் பல நிகழ்ச்சிகளையும் ஹோபின் செயலியை கொண்டு ஆன்லைனில் virtual ஆக செய்யும் வகையில் ஜானி வடிவமைத்திருந்தார்.

இப்படி இருக்கையில் கொரோனா காரணமாக கடந்த 2020ம் ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வீட்டுக்குள்ளேயே முடங்கிய ஜானி, தனது காதலியின் படுக்கையறையில் இருந்தபடியே ஹோபின் செயலிக்கான கோடிங் பணியில் ஈடுபட்டதோடு வெற்றிகரமாக செயலியையும் அறிமுகம் செய்துள்ளார்.

இதுவரையில் Hopin செயலியை 50 லட்சத்துக்கும் மேலானோர் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது ஹோபின் நிறுவனத்தின் சில பங்குகளை விற்ற ஜானிக்கு 1000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

banner

Related Stories

Related Stories