உலகம்

அமெரிக்காவை உலுக்கிய ‘பேய் வழக்கு’ : கொன்றது யார்? கடைசியில் நடந்தது என்ன?

வழக்கு கொடுக்கப்போகும் தீர்ப்பும் ‘பேய்’ பற்றிய நம்பிக்கையை நீதிமன்றம் எதிர்கொள்ளப் போகும் விதமுமே மக்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டியது.

அமெரிக்காவை உலுக்கிய ‘பேய் வழக்கு’ : கொன்றது யார்? கடைசியில் நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

அது ஒரு விடுமுறை நாள். ஆர்னி விடுப்பு எடுத்திருந்தான். உடல்நலக் குறைவை காரணமாகச் சொல்லி இருந்தான். அவனுடைய காதலி டெபிக்கு வேலை இருந்தது. அவள் ஆலன் போனா மேலாளராக இருந்த நாய் பராமரிப்பு மையத்தில் வேலை பார்த்தாள். ஆலன் போனோவுக்கு வயது நாற்பது. சுய புராணம் பேசியே வாழ்க்கையை தள்ளிக் கொண்டிருப்பவன். குடிகாரன்.

விடுமுறை நாளென்பதால் நண்பர்கள் அனைவரும் டெபி வேலை பார்க்கும் பராமரிப்பு மையத்தில் சந்திப்பது என ஏற்பாடாகியிருந்தது. டெபியின் தங்கைகள் வாண்டா மற்றும் மேரி பராமரிப்பு மையத்தில் இருந்தார்கள். ஆர்னியும் சென்று சேர்ந்தான். மையத்திலிருந்து நாய்களை கொஞ்சி, விளையாடி பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கும்போது, மேலாளர் ஆலன் போனோ வந்தான். அவர்கள் அனைவரும் மையத்தில் இருப்பதில் ஆலனுக்கு பிரச்சினை ஏதும் இருக்கவில்லை. அவனும் அவர்களுடன் இணைந்தான். மதிய உணவுக்காக ஒரு மதுவிடுதிக்கு அனைவரையும் அழைத்து சென்றான்.

அனைவரும் உணவருந்தினார்கள். பின் மது அருந்தினார்கள். ஆலன் வழக்கம்போல் அதிகமாக மது அருந்தினான். மெல்ல பேச்சு மாறியது. முறை தவறியது. ஆலன் மேரியிடம் வம்பிழுத்தான். டெபியை பற்றி பேசினான். தவறாக நடக்க முயற்சித்தான். ஆர்னி குறுக்கே புகுந்து மறித்தான். பிரச்சினை ஆனது. வாக்குவாதம் உயர்ந்தது. அடிதடி என்ற கட்டத்தை பிரச்சினை நெருங்கியபோது, அது நடந்தது.

ஆர்னியின் முகம் மாறியது. கண்கள் விரிய பித்து பிடித்தவன் போன்ற பாவனையை பெற்றான். ‘ஸ்ஸ்ஸ்’ என பாம்பை போல சீறினான். சுற்றி இருந்தோருக்கு முதலில் புரியவில்லை. உறுமினான். பிறகு, குரலெடுத்து ஆங்காரமாக ‘ஓ’வென ஊளையிட்டான். மற்ற அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்று கொண்டிருந்தார்கள்.

சட்டைக்குள்ளிருந்து ஒரு கத்தியை உருவினான் ஆர்னி. 5 அடி நீளக்கத்தி. ஆலன் போனோவின் வயிற்றில் பாய்ச்சினான். உள்ளே செருகிய கத்தியை வெளியே எடுக்காமல் அப்படியே வலதுபக்கம் வரை மேலாக இழுத்து எடுத்தான். அதோடு முடிக்காமல் பலமுறை கத்தியைக் கொண்டு ஆலனை குத்தினான். ஆலன் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். உடனே தகவல் காவல்துறைக்கு கொடுக்கப்பட்டது. விடுதியிலிருந்து சற்று தூரத்திலேயே காவல்துறையால் ஆர்னி மடக்கப்பட்டு கைது செய்யப்பட்டான்.

ஆலன் கொல்லப்பட்டதே அதிர்ச்சி என்றால், அந்த கொலை வழக்கு நடந்த விதம் மேலும் அதிர்ச்சியளிப்பதாய் இருந்தது.

கொலைக்கான விசாரணை நீதிமன்றத்துக்கு வந்தது. கொலை செய்ததை ஆர்னி ஒப்புக் கொள்ளவில்லை. மாறாக அவனைப் பேய் பிடித்திருந்ததாகவும் அந்த பேயே ஆலனை கொன்றதாகவும் வாதத்தை முன் வைத்தான். அமெரிக்கா அதிர்ச்சி அடைந்தது. பேய் கொலை செய்ய முடியுமா? அப்படி செய்தாலும் அதை எப்படி தண்டிக்க முடியும்?

பெரும்பாலான மக்கள், தன்னை காத்துக் கொள்ளவே சமயோசிதமாக ‘பேய்’ என்ற நம்பிக்கையை ஆர்னி பயன்படுத்துவதாக நினைத்தனர்.

ஆர்னியின் வழக்கு பரபரப்பாக நாடு முழுக்க பேசப்பட்டது. ‘பேய் வழக்கு’ என்றெல்லாம் பல பெயர்கள் சூட்டப்பட்டன. வழக்கு கொடுக்கப்போகும் தீர்ப்பும் ‘பேய்’ பற்றிய நம்பிக்கையை நீதிமன்றம் எதிர்கொள்ளப் போகும் விதமுமே மக்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டியது.

விசாரணை தொடங்கும் நாளில் நீதிமன்றத்துக்கு அருகே இருந்த ஹோட்டல்களில் அறைகள் பதிவு செய்யப்பட்டன. விசாரணை அறையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. விசாரணை தொடங்கியதுமே பேய் பிடித்த கதையை ஆர்னி தொடங்கினார். அவ்வளவுதான். நீதிபதி அப்படியே நிறுத்தினார். பேய்க்கதையை கேட்கவில்லை. பேய் பிடித்ததால் கொலை நிகழ்ந்தது என்கிற வாதத்தையும் அவர் ஏற்கவில்லை. உடனடியாக அந்த வாதம் மறுத்து நிறுத்தப்பட்டது.

அடுத்தகட்டமாக நீதிபதியை மாற்ற விண்ணப்பித்தார் மார்டின். நீதிபதி அதற்கும் மசியவில்லை.

“‘பேய் பிடித்ததாக’ சொல்லும் விஷயம் சட்டப்பூர்வமானது கிடையாது. அதற்கு கொடுக்கப்படும் ஆதாரங்களையும் ஏற்க முடியாது. ஏனென்றால் அவற்றை உறுதிப்படுத்தும் வாய்ப்புகள் இல்லை. தேவையில்லாமல் நீதிபதிகளை குழப்புகிற வேலை இது” என நம்பிக்கை சார்ந்த நீதிமன்ற விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நீதிபதி.

சாதாரண கொலை வழக்காக மட்டுமே விசாரணை நடந்தது. வழக்குக்கான பரபரப்பு மறைந்தது. விசாரிக்கப்பட்ட சாட்சிகள் ஆர்னியே கொலை செய்ததாக ஒப்புக் கொண்டன. தற்காப்புக்காகவே ஆர்னி கொலை செய்ய முற்பட்டார் என்ற வாதத்தையும் முன்வைத்துப் பார்த்தார் வழக்கறிஞர். செல்லுபடி ஆகவில்லை. நான்கு நாட்களில் விசாரணை முடிந்து பத்திலிருந்து இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை ஆர்னிக்கு வழங்கப்பட்டது.

காலம் ஓடியது.

நன்னடத்தையின் காரணமாக நான்கு வருடங்களிலேயே ஆர்னி விடுவிக்கப்பட்டார். டெபியை ஆர்னி மணம் முடித்துக் கொண்டார். டெபி தொடங்கி வழக்கறிஞர் வரை, நடந்த சம்பவங்களை உண்மையெனவே நம்பிக் கொண்டிருக்கின்றனர். அந்த நம்பிக்கைக்கு தேவையான பதில்களை அவர்களுக்கு அவர்களே கொடுத்துக் கொண்டனர். தேவையான புரிதல்களை ஏற்படுத்திக் கொண்டனர்.

எல்லாவற்றுக்கும் பிறகு உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். பேய் உண்மையாகவே இருக்கிறதா?

அதற்குப் பிறகு ஆர்னியை பேய் பிடிக்கவே இல்லை. ஏனெனில் அவனை மனநல காப்பகத்தில் சில காலம் சேர்த்திருந்தார்கள். அங்கு அவன் குணமடைந்துவிட்டான். அறிவியல் கொடுத்த தீர்வில் பேய் அவன் கண்ணுக்கு புலப்படவே இல்லை. அதிலும் உச்சமாக 2006ஆம் ஆண்டில் டேவிட் ஒரு விஷயம் செய்தான்.

தனக்கு நேர்ந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட புத்தகத்துக்கு எதிராக வழக்கு தொடுத்தான். பேய் பிடித்ததாக புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் சம்பவங்கள் யாவும் கற்பனை என்றும் வாதிட்டான். தனக்கிருந்த மனநோயை வாரன் தம்பதிகள் அவர்களில் இஷ்டத்துக்கு திரித்து பயன்படுத்தி பணம் சம்பாதித்துவிட்டார்கள் என முறையிட்டு, வெற்றி அடைந்து, நஷ்ட ஈடும் பெற்றான்.

உண்மையில் ஆர்னிக்கு பேய் பிடிக்கவில்லை. பேய்க்கும் ஆர்னியைப் பிடிக்கவில்லை.

banner

Related Stories

Related Stories