உலகம்

ஆப்கானில் கைமாற்றப்பட்ட குழந்தை இப்போ எங்கே இருக்கிறது தெரியுமா? பெற்றோர்-டாக்ஸி டிரைவரின் பாசப்போராட்டம்

ஆப்கானில் கைமாற்றப்பட்ட குழந்தை இப்போ எங்கே இருக்கிறது தெரியுமா? பெற்றோர்-டாக்ஸி டிரைவரின் பாசப்போராட்டம்
• Twitter
• Facebook
• WhatsApp
Updated on

ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் ஆக்கிரமித்ததை அடுத்து தாலிபன்களின் கெடுபிடிகளுக்கு அஞ்சி அந்நாட்டு குடிமக்களே வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லும் சூழல் இதுகாறும் தொடர்ந்து வருகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சாரை சாரையாக ஆப்கானியர்கள் நாட்டை விட்டு வெளியேறி பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ராணுவ விமானங்களில் தப்பிச் சென்றனர்.

அப்போது பல்வேறு கோர சம்பவங்கள் நடைபெற்றது. விமானத்தின் இறக்கைகளில் தொங்கியும், முண்டியடித்துக் கொண்டு தப்பிப்பதும் முள்வேலிகளில் ஏறி தப்பிப்பதுமாக இருந்தனர். அது தொடர்பான வீடியோக்கள் பலவும் சமூக வலைதளங்களில் பரவி காண்போரை கண்கலங்கச் செய்தன.

அதில் ஒன்றுதான் காபூல் விமான நிலையத்தில் தாய் ஒருவர் தன்னுடைய கைக்குழந்தையை அமெரிக்க ராணுவத்தினர் வசம் முள்வேலியை வழியாக கைமாற்றிவிட்டனர். விமானத்துக்குள் ஏறிய பின்னர் குழந்தையை பெற்றுக்கொள்ளலாம் என எண்ணிய பெற்றோர்களுக்கு அமெரிக்கா சென்ற பிறகும் அவர்களது குழந்தை கிடைத்தபாடில்லை.

இடது: தாத்தவுடன் குழந்தை

வலது: டாக்ஸி டிரைவருடன் குழந்தை

இடது: தாத்தவுடன் குழந்தை

வலது: டாக்ஸி டிரைவருடன் குழந்தை

இந்நிலையில், காபூல் விமானநிலையத்தில் கைமாற்றப்பட்ட குழந்தை அங்கேயே கைவிடப்பட்டு இருந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது. இதனைக் கண்ட ஆப்கன் டாக்ஸி டிரைவர் ஒருவர் அந்த குழந்தையை பாதுகாத்து தன்னுடைய குழந்தையாக இத்தனை நாட்களாக வளர்த்து வந்திருக்கிறார் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், குழந்தையின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் டாக்ஸி டிரைவர் பதிவேற்றியதை அமெரிக்காவில் இருந்த பெற்றோர் கண்டறிந்திருக்கிறார்கள்.

குழந்தைக்கு பிரியாவிடை கொடுத்த டாக்ஸி டிரைவர்

குழந்தைக்கு பிரியாவிடை கொடுத்த டாக்ஸி டிரைவர்

இதனையடுத்து குழந்தையின் தந்தையான அகமாதி ஆப்கானிஸ்தானில் இருக்கும் அவரது மனைவியின் தந்தை மூலம் டாக்ஸி டிரைவரிடம் இருந்த குழந்தையை மீட்டிருக்கிறார்கள்.

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சர்வதேச செய்தி நிறுவனங்கள் மூலம் சமூக வலைதளங்களில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories