உலகம்

74000 கோடி செலவில் அனுப்பப்பட்ட தொலைநோக்கி: பிரபஞ்சத்தின் தொடக்கத்தை அறிய முடியுமா?- என்ன சொல்கிறது NASA?

விண்வெளி தொலைநோக்கி நிலவில் இருந்து மூன்று மடங்கு தொலைவுக்குச் சென்று, சூரியனை சுற்றியவாறு தனது ஆய்வுப் பணியை மேற்கொள்ளும்.

74000 கோடி செலவில் அனுப்பப்பட்ட தொலைநோக்கி: பிரபஞ்சத்தின் தொடக்கத்தை அறிய முடியுமா?- என்ன சொல்கிறது NASA?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உலகின் சக்திவாய்ந்த விண்வெளி தொலைநோக்கியான 'ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்' (JWST) கிறிஸ்துமஸ் தினத்தன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'நாசா'வுடன், ஐரோப்பிய விண்வெளி நிறுவனமும், கனடா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் எனப்படும், விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கியுள்ளன.

இந்தத் தொலைநோக்கிதான் பூமியில் இதுவரை தயாரிக்கப்பட்ட தொலைநோக்கிகளிலேயே மிகவும் பெரியது. உலகின் மிகச் சக்திவாய்ந்த தொலைநோக்கியான இது, கிறிஸ்துமஸ் அன்று விண்ணில் செலுத்தப்பட்டது.

பிரான்ஸ் நாட்டிற்கு சொந்தமான பிரெஞ்சு கினியா பிராந்தியத்தில் உள்ள குரோவ் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து 'ஏரியன் - 5' ரக ஏவுகணை வாயிலாக இந்த தொலைநோக்கி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்தத் தொலைநோக்கி பூமிக்கு வெளியே மிக அதிக தொலைவில் விண்வெளி ஆராய்ச்சியை மேற்கொள்ளவிருப்பதால் அதிக வெப்பத்தை தாங்க வசதியாக இதில் ஒரு பக்கம் தங்க முலாம் பூசிய சோலார் பேனல்களும் சூரிய ஒளி எதிர்ப்பு பில்டர்களும் உள்ளன.

இதன் மறுபக்கம் சூரியனுக்கு எதிர்ப்பக்கம் என்பதால் மைனஸ் 270 டிகிரி குளிர் வெப்பநிலையை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் எடை 6,500 கிலோகிராம் ஆகும். இதை உருவாக்க மட்டுமே 74 ஆயிரம் கோடி செலவாகியுள்ளது.

பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் இந்த தொலைநோக்கி நிலைநிறுத்தப்பட உள்ளது. குறிப்பிட்ட அந்த இடத்தை அடைய ஒரு மாத காலம் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

74000 கோடி செலவில் அனுப்பப்பட்ட தொலைநோக்கி: பிரபஞ்சத்தின் தொடக்கத்தை அறிய முடியுமா?- என்ன சொல்கிறது NASA?

இந்த விண்வெளி தொலைநோக்கி நிலவில் இருந்து மூன்று மடங்கு தொலைவுக்குச் சென்று, சூரியனை சுற்றியவாறு தனது ஆய்வுப் பணியை மேற்கொள்ளும்.

இந்த தொலைநோக்கியின் முக்கிய பணிகளாக நாசா சொல்வது, இந்த தொலைநோக்கி பிரபஞ்சத்தின் முதல் நட்சத்திரத்தை கண்டுபிடிக்கும் சக்திகொண்டது என்றும் உலகம் உருவானது பற்றி மனித குலம் இதுவரை அறிந்திடாத புதிய தகவல்கள் கிடைக்கும் என்பதும்தான்.

மேலும், பூமியைப் போல மற்ற கோள்களில் மனிதர்கள் உயிர் வாழ முடியுமா என்பது குறித்தும், மற்ற கிரகங்களில் உயிரினங்கள் ஏதேனும் வாழ்கின்றனவா என்பதை அறியவும் இந்த தொலைநோக்கி பயன்படும் என நாசா தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories