சினிமா

நிறவெறியை மீறி எழுந்த நாசா பெண்கள்... உண்மைக் கதையைச் சொல்லியிருக்கும் ‘Hidden Figures’ திரைப்படம்!

நாசாவில் பணிபுரிந்த முதல் கறுப்பின பெண்களின் நிலையும் வெற்றியும் குறித்த ‘Hidden Figures’ திரைப்படம் சொல்லும் செய்தி என்ன?

நிறவெறியை மீறி எழுந்த நாசா பெண்கள்... உண்மைக் கதையைச் சொல்லியிருக்கும்  ‘Hidden Figures’ திரைப்படம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

Hidden Figures என்றொரு படம். நாசாவில் பணிபுரிந்த முதல் கறுப்பின பெண்களின் நிலையும் வெற்றியும்தான் கதை.

இரண்டு காட்சிகள் மட்டும் சொல்கிறேன். கதை புரிந்துவிடும்.

1. நாசாவில் வேலை பார்க்கும்போது தலைமை அதிகாரி கறுப்பின பெண்ணிடம் எந்த வேறுபாடும் காட்டாது பழகுவான். ஆனால் அவளுடன் வேலை பார்க்கும் பிறர் கடுமையாக வேறுபாடு பார்ப்பார்கள். அவளும் தங்களுடன் தேநீர் குடிக்கிறாள் என்பதற்காகவே தனியாக ஒரு டீ மேக்கர் வைப்பார்கள். கறுப்பினத்தவருக்கு என தனி கழிப்பறைகள் பயன்பாட்டில் இருந்த காலம் என்பதால், தங்களுக்கான கழிப்பறை எங்கு இருக்கிறது என நாயகி கேட்டும் மேலாளர் பெண் அகங்காரத்துடன் தெரியாது என சொல்கிறாள்.

வேறு வழியின்றி ஒவ்வொரு முறைக்கும் அரை மைல் தூரம் ஓடிச் சென்று வேறொரு கட்டிடத்தில் இருக்கும் ‘கறுப்பினத்தவருக்கான கழிப்பறையை நாயகி பயன்படுத்துகிறாள். ஒருமுறை தலைமை அதிகாரி அவள் இல்லாதது கண்டு, அவள் வந்ததும் காரணம் கேட்க, நாயகி மனக்குமுறலை கொட்டி தீர்க்கிறாள். அதைத் தொடர்ந்து, தலைமை அதிகாரி ஒரு சுத்தியல் கொண்டு, கறுப்பினத்தவருக்கான கழிப்பறை (Colored Ladies Room) என எழுதப்பட்டிருக்கும் பெயர்ப் பலகையை எல்லாரும் பார்க்க, உடைக்கிறான். உடைத்து நொறுக்கிவிட்டு, தலைமை அதிகாரி சொல்வான்:

"Here at NASA we all pee the same color."

2. நாயகிகளில் இன்னொரு பெண் IBM Mainframe இயக்க தேவைப்படும் Fortran மொழி தெரிந்தவர். ஆனால் மேலாளர் வெள்ளைப் பெண் அதிகாரி, நாயகிக்கு வாய்ப்பு கொடுக்கவே மாட்டார். ஆனாலும் திருட்டுத்தனமாக சென்று, தான் படிப்பதை கணினியில் உள்ளிட்டு சோதித்துப் பார்த்துக்கொள்வார் நாயகி. அதை மற்ற ஊழியர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள். அவள் திறமை உணர்ந்து, பெண் மேலதிகாரி தர மறுத்த, பணி உயர்வு அவளுக்கு அளிக்கப்படும். படம் முடியும் தறுவாயில் இருவரும் சந்திப்பார்கள். அப்போது நடக்கும் உரையாடல்:

மேலதிகாரி: Despite what you may think, I have nothing against you all.

நாயகி: I know, I know you probably believe that.

இப்படி சில மெய்சிலிர்க்கும் தருணங்கள் படத்தில் உண்டு. அதைத் தாண்டி நெருடும் அரசியலும் உண்டு.

நிறவெறியை மீறி எழுந்த நாசா பெண்கள்... உண்மைக் கதையைச் சொல்லியிருக்கும்  ‘Hidden Figures’ திரைப்படம்!

மூன்று நாயகியரில் ஒருத்தியின் கணவன் கறுப்பினத்தவருக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு கொதிக்கும் போராட்ட குணம் கொண்டவனாக இருப்பான். ஆனால், அதில் மனைவிக்கு உடன்பாடு இருக்காது. அதாவது, நியாயத்துக்காக போராடவெல்லாம் கூடாது. அமெரிக்க வாழ்க்கையில் என்ன சாத்தியமோ அதை மட்டும் அடைந்துகொள்ள வேண்டும் என்கிற வெள்ளைச் சிந்தனை.

மேற்கூறிய பெண்ணிய மற்றும் நிற வேற்றுமைக்கு எதிரான சில தருணங்களுக்காக படத்தைப் பார்க்கலாம். Feel good movie. ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இருக்கிறது.

banner

Related Stories

Related Stories