உலகம்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை: இந்தியாவிற்கு ஆபத்தா?

இந்தோனேசியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்.. சுனாமி  எச்சரிக்கை: இந்தியாவிற்கு ஆபத்தா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தோனேசியாவின் மவுமேரா நகரின் வடக்கு பகுதியில் உள்ள ப்ளோரா தீவில் இன்று காலை 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கடற்பகுதியில் சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்தோனேசியாவில் கடற்கரை ஓரத்தில் வசிக்கும் மக்கள் உடனே பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நில நடுக்கம் ஏற்பட்ட இடத்தில் இருந்து 1000 கி.மீ பரப்பளவுக்கு சுனாமி அலைகள் உருவாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுவதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து இந்தோனோசியாவை ஒட்டியுள்ள நாடுகளும் தங்களின் கடற்கரைப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இந்தியாவுக்கு பாதிப்பில்லை என இந்திய சுனாமி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2004ம் ஆண்டு டிசம்பரில் இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் ஏற்பட்டநிலநடுக்கத்தால் தமிழக கடலோர பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories