உலகம்

பாலத்தில் சென்ற பேருந்தை கவிழ்த்த வெள்ளம்.. 31 பேர் பலி.. கென்யாவில் கோரச் சம்பவம்!

திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றபோது பேருந்து ஆற்று வெள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 31 பேர் உயிரிழந்தனர்.

பாலத்தில் சென்ற பேருந்தை கவிழ்த்த வெள்ளம்.. 31 பேர் பலி.. கென்யாவில் கோரச் சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கென்யாவில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றபோது பேருந்து ஆற்று வெள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 31 பேர் உயிரிழந்தனர்.

கென்யா நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் மக்கள் அல்லலுற்று வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கென்ய தலைநகர் நைரோபியில் இருந்து 200 கி.மீ. தொலைவில், ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தேவாலயம் ஒன்றின் பாடகர் குழுவினர் ஒரு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.

பேருந்து, கிடுய் கவுண்டியில் உள்ள என்சியூ என்ற ஆற்றின் பாலத்தின் மீது வேகமாக ஓடிய வெள்ள நீரை கடந்து செல்ல முயற்சித்தபோது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஆற்றில் கவிழ்ந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மீட்புப் படையினரும், போலிஸாரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்தக் கோர விபத்தில் 31 பேர் பலியாகினர். பலியானவர்களில் 4 பேர் குழந்தைகள்.

12 பேர் மீட்புக்குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்றபோது விபத்தில் சிக்கி 31 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

banner

Related Stories

Related Stories