உலகம்

“15 ஆண்டுகளில் பெரும் அழிவு - அமேசான் மழைக்காடுகளில் 13,000 ச.கி.மீட்டரை இழந்த பூமி” : விளைவு என்ன?

அமேசானில் உள்ள மழைக்காடுகளில் 13,235 சதுர கி.மீட்டரை பூமி இழந்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

“15 ஆண்டுகளில் பெரும் அழிவு -  அமேசான் மழைக்காடுகளில் 13,000 ச.கி.மீட்டரை இழந்த பூமி” : விளைவு என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலகளவில் மிகப்பெரிய காட்டுப் பகுதியான அமேசான் காடுகளில் அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள், அரிய வகை விலங்குகள், பறவைகள் என பலவகை உயிரினங்கள் உள்ளன. அமேசான் காடுகளின் பெரும்பகுதி பிரேசிலிலும், கொலம்பியா, வெனிசுலா, பொலிவியா, கயானா, பிரெஞ்ச் கயானா உள்ளிட்ட நாடுகளிலும் அமைந்துள்ளது.

அமேசான் மழைக் காடுகள்தான் புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கினை வகிக்கிறது. ஆனால், இந்தக் காடுகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு மட்டும் அதிக முறை காட்டுத்தீ உருவாகியுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளில் அமேசான் மழைக்காடுகளில் 72 ஆயிரத்து 843 முறை காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இது கடந்தாண்டில் ஏற்பட்ட காட்டுத்தீயின் எண்ணிக்கையை விட 83 சதவீதம் அதிகம் எனக் கூறப்படுகிறது. இந்த காட்டுத்தீயினால் உயிரினங்கள் பல அழிந்துள்ளதாகவும், உயிர்க்கோளத்தின் மறுசுழற்றியே சிதைந்துபோகும் அபாயத்தை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

“15 ஆண்டுகளில் பெரும் அழிவு -  அமேசான் மழைக்காடுகளில் 13,000 ச.கி.மீட்டரை இழந்த பூமி” : விளைவு என்ன?

பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காடுகள் அழிந்து வருவது உலக நாட்டு மக்களிடையே விவாதத்தைக் ஏற்படுத்தியுள்ளது. மேலும் அரசாங்கம் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இந்த வனங்களை அழித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளதாகவும் பழங்குடியினர் குற்றச்சாட்டியுள்ளனர்.

அதுமட்டுமல்லாது, பிரேசிலின் வலதுசாரி அதிபர் ஜெய்ர் போல்சனாரோ பொறுப்பேற்ற பிறகு காட்டு வளம் அழிவது அதிகரித்து வருகிறது என்றும் திட்டமிட்டே காட்டுப்பகுதிகளில் தீ வைப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கின்றன எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், அமேசான் காடழிப்பு குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. புரோடெஸ் என்ற தேசிய கண்காணிப்பு மையம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், காட்டு வளம் பற்றிய தங்கள் ஆய்வுக்கு ஆகஸ்ட் 2020 முதல் ஜூலை 2021 வரையிலான காலகட்டத்தை எடுத்துக் கொண்டது. இந்தக் காலகட்டத்தில் 22 சதவிகிதம் அழிவு அதிகமாக ஏற்பட்டிருப்பதாகத் தெரிய வந்தது. இது 2006ஆம் ஆண்டுக்குப்பிறகு, அதாவது 15 ஆண்டுகளில், ஏற்பட்டுள்ள பெரும் அழிவு என்று தெரிகிறது எனத் தெரிவித்துள்ளார்.

“15 ஆண்டுகளில் பெரும் அழிவு -  அமேசான் மழைக்காடுகளில் 13,000 ச.கி.மீட்டரை இழந்த பூமி” : விளைவு என்ன?

மேலும் அமேசானில் உள்ள மழைக்காடுகளில் 13,235 சதுர கி.மீட்டரை பூமி இழந்திருக்கிறது. இதுவரை எந்த ஆண்டிலும் 10,000 ச.கி.மீக்கு மேல் அழிவு ஏற்பட்டதில்லை. காட்டு வளம் அழிவது பற்றி மேற்கொள்ளப்பட்ட சில முதற்கட்ட ஆய்வுகள் நிலைமை படுமோசமாகியிருப்பதைக் காட்டுகின்றன.

கடந்த மூன்று ஆண்டுகளில் அழிக்கப்பட்ட காட்டு வளத்தின் சராசரி பெரும் அளவில் அதிகரித்திருக்கிறது. இது முதற்கட்ட ஆய்வுத் தகவல் என்றாலும், இறுதிக்கட்ட ஆய்வறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில்தான் அமையும் என்று பிரேசில் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

banner

Related Stories

Related Stories