உலகம்

“உங்கள் வெற்று பேச்சால் கிளாஸ்கோ மாநாடு தோல்வியடைந்துவிட்டது” : உலக தலைவர்களை சாடிய கிரெட்டா துன்பர்க்!

கிளாஸ்கோ மாநாடு தோல்வியடைந்துவிட்டது என கிரெட்டா துன்பெர்க் தெரிவித்துள்ளார்.

“உங்கள் வெற்று பேச்சால் கிளாஸ்கோ மாநாடு தோல்வியடைந்துவிட்டது” : உலக தலைவர்களை சாடிய 
 கிரெட்டா துன்பர்க்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைக் குறைப்பது தொடர்பான பருவநிலை மாநாடு ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோவில் அக்டோபர் 30ம் தேதி தொடங்கி, நவம்பர் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, “பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் கூறப்பட்ட அம்சங்களைக் கடைப்பிடிக்கும் ஒரே நாடு, உறுதிமொழியைக் கடைப்பிடிக்கும் ஒரே நாடு இந்தியா என்பதை உலக நாடுகள் உணர்ந்துவிட்டன.

பாரீஸ் மாநாட்டில் கூறப்பட்டுள்ள பல அம்சங்களைக் கடைப்பிடிக்க நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். 2070-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் கார்பன் இல்லாத பூஜ்ஜிய நிலைக்கு வர இலக்கு வைத்துள்ளோம்” என தெரிவித்திருந்திருந்தார்.

பிரதமர் மோடியைப் போன்ற மற்ற உலக நாடுகளின் தலைவர்களும் கிளாஸ்கோ மாநாட்டில் பங்கேற்று தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது குறித்தான தங்களின் முன்முடிவுகளையும் உலக தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

“உங்கள் வெற்று பேச்சால் கிளாஸ்கோ மாநாடு தோல்வியடைந்துவிட்டது” : உலக தலைவர்களை சாடிய 
 கிரெட்டா துன்பர்க்!

இந்நிலையில், கிளாஸ்கோ மாநாடு தேல்வியடைந்துவிட்டது என்றும் உலக தலைவர்கள் பேசுவது எல்லாம் வெற்று பேச்சாகவே இருக்கிறது எனவும் சூழலியல் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பெர்க் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து கிரெட்டா துன்பெர்க் கூறுகையில், “ஒரு வாரமாக நடைபெற்று வரும் கிளாஸ்கோ மாநாட்டில் பங்கேற்ற உலக தலைவர்கள் பேசியது வெற்று பேச்சாகவே உள்ளது. இதனால் இந்த மாநாடு படுதோல்வியடைந்துவிட்டது.

இந்த மாநாடு தோல்வியடைந்து விட்டது என்பதை யாரும் சொல்லித் தெரியத்தேவையில்லை. கண் துடைப்பு மாநாடாகவே இது உள்ளது. உலகத் தலைவர்கள் உண்மையில் வழிநடத்துபவர்களாக இல்லை. இப்படி உலக தலைவர்கள் இருப்பது வேதனையாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories