உலகம்

ஓடும் ரயிலில் 17 பேருக்கு கத்திகுத்து.. பயணிகளை அலறவிட்ட நிஜ ‘ஜோக்கர்’ : ஜப்பானில் நடந்த ‘பகீர்’ சம்பவம்!

ஓடும் ரயில் 17 பயணிகளைக் கத்தியால் குத்திய சம்பவம் ஜப்பானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓடும் ரயிலில் 17 பேருக்கு கத்திகுத்து.. பயணிகளை அலறவிட்ட நிஜ ‘ஜோக்கர்’ : ஜப்பானில் நடந்த ‘பகீர்’ சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கியா என்ற ரயில்நிலையம் உள்ளது. இங்கிருந்து ஷின்ஜூகு தினந்தோறும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை கியா ரயில் நிலையத்திலிருந்து ஷின்ஜூகு ரயில் ஒன்று புறப்பட்டுச் சென்றது.

இதில், ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். அப்போது இந்த ரயிலில் பேட்மேன் திரைப்படத்தில் வரும் 'ஜோக்கர்' கதாபாத்திரம் போன்று இளைஞர் ஒருவர் வேடமிட்டிருந்தார். அன்றைய தினம் மாறுவேடங்களுக்கான திருவிழா என்பதால் பயணிகள் யாரும் முதலில் அவரை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

இதையடுத்து அந்த நபர் தீடிரென பெரிய கத்தியை எடுத்து அருகே இருந்த பயணிகளைத் தாக்கத்தொடங்கினார். இந்த தாக்குதலைச் சற்றும் எதிர்பார்க்காத பயணிகள் அலறியடித்து ஓடத் தொடங்கினர். ஜோக்கர் வேடமிட்டு நபர் கத்தியால் குத்தியதில் 17க்கும் மேற்பட்ட பயணிகளுக்குப் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தை ரயிலில் பயணம் செய்த சிலர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். ரயில் அடுத்த நிலையத்தில் நின்றவுடன் பயணிகள் ரயிலை விட்டு வெளியே ஓடினர்.

ஓடும் ரயிலில் 17 பேருக்கு கத்திகுத்து.. பயணிகளை அலறவிட்ட நிஜ ‘ஜோக்கர்’ : ஜப்பானில் நடந்த ‘பகீர்’ சம்பவம்!

இது குறித்து தகவல் அறிந்து ரயில் நிலையம் வந்த போலிஸார் தாக்குதல் நடத்திய நவரை கைது செய்தனர். போலிஸார் வரும் அவரை அந்த நபர் ரயில் இருக்கையில் அமர்ந்து கொண்டு எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார்.

பின்னர் போலிஸார் வந்து கைது செய்தபோது, எவ்விதமான இடையூறும் கொடுக்காமல் அமைதியாக கைதானர். மேலும் இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து அந்த ரயில் நிலையத்தில் தற்காலிகமாகப் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டது.

banner

Related Stories

Related Stories