உலகம்

தேவாலயத்தில் இங்கிலாந்து MP குத்திக் கொலை... இளைஞரின் வெறிச் செயல்!

இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மர்ம நபரால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேவாலயத்தில் இங்கிலாந்து MP குத்திக் கொலை... இளைஞரின் வெறிச் செயல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இங்கிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினரான டேவிட் அமெஸ் இன்று எசக்ஸ் பகுதியில் உள்ள பெல்ஃபேர்ஸ் மெத்தடிஸ்ட் தேவாலயத்துக்குச் சென்றிருந்தார்.

அப்போது, அங்கிருந்து மக்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென இளைஞர் ஒருவர் டெவிட் அமெஸை கத்தியால் குத்தினார். அதனால் மக்கள் அதிர்ச்சியடைந்து ஓடினர்.

அவரது பாதுகாவலர்கள் தடுப்பதற்குள் அந்த இளைஞர் டேவிட் அமெஸை பல முறை கத்தியால் குத்தினார். பின்னர் அந்த மர்ம நபரை அவரது பாதுகாவலர்கள் தடுத்தனர். பிறகு டேவிட் அமெஸை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

பிடிபட்ட இளைஞரிடம் போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட டேவிட் அமெஸ் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories