உலகம்

அரசின் திடீர் அறிவிப்பை கண்டித்து வீதிக்கு வந்த இத்தாலி மக்கள் : காரணம் என்ன?

பணியிடங்களில் 'ஹெல்த் பாஸ்' கட்டாயம் என்ற இத்தாலி அரசின் அறிவிப்புக்கு அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசின் திடீர் அறிவிப்பை கண்டித்து வீதிக்கு வந்த இத்தாலி மக்கள் : காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு எதிராகப் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசியைச் செலுத்துவதற்கான பல்வேறு முற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இத்தாலி நாட்டின் ரோம் நகரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக பணியிடங்களில் கொரோனா 'ஹெல்த் பாஸ்' திட்டம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பை அடுத்து பொதுமக்கள் பாராளுமன்றம் நோக்கி பேரணியாகச் சென்று அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது பொதுமக்கள் மீது போலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி விரட்டியடித்தனர். இருந்தபோதும், ஹெல்த் பாஸ் திட்டத்தைக் கைவிட வேண்டும் என மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். முன்னதாக முன்களப் பணியாளர்களுக்கு மட்டுமே ஹெல்த் பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அரசின் திடீர் அறிவிப்பை கண்டித்து வீதிக்கு வந்த இத்தாலி மக்கள் : காரணம் என்ன?

ஆனால், திடீரென அனைத்து பணியிடங்களிலும் ஹெல்த் பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இதைக் காட்டாத தொழிலாளர்கள் ஊதியம் மற்றும் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என இத்தாலி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இத்தாலி அரசின் திடீர் அறிவிப்பு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதன் ஒரு பகுதியாகத்தான் ரோம் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி பேரணியாகப் பாராளுமன்றம் நோக்கிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களின் போராட்டத்தால் இத்தாலி அரசுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories