உலகம்

இங்கிலாந்தில் கடும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு... நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்: காரணம் என்ன?

இங்கிலாந்தில் கடும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் கடும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு... நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்: காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில் இங்கிலாந்து நாட்டில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாகப் பல பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் இல்லாததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் இருப்பு உள்ள பெட்ரோல் நிலையங்களில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இங்கிலாந்து தலைநகர் லண்டனிலும் இதே நிலைதான் உள்ளது. இருந்தபோதும் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை என அரசு தெரிவித்துள்ளது.

இந்த எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு எரிபொருள் டேங்கர் லாரிகள் உரிய நேரத்திற்கு வந்து சேராததால்தான் இதற்குக் காரணம் என கூறப்படுகிறது. மேலும் கொரோனா மற்றும் ப்ரெக்ஸிட் பாதிப்பு காரணமாக ஒரு லட்சம் லாரி ஓட்டுநர்களுக்கு பற்றாக்குறை இருப்பதாக கனரக வாகனத்துறை கணக்கிட்டுள்ளது.

இங்கிலாந்தில் கடும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு... நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்: காரணம் என்ன?

கொரோனா தொற்று காரணமாக 2020ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிய 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனரக ஓட்டுநர்கள் நாடு திருப்பவில்லை என்றும் கூறப்படுகிறது. கனகர வாகன ஓட்டுநர்களின் பற்றாக்குறையாலேயே தற்போது இங்கிலாந்து நாட்டில் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories