உலகம்

“12 வருசமா தினமும் 30 நிமிஷம்தான் தூங்குறேன்” : அதிர்ச்சி கொடுத்த மனிதர் - சோதித்துப் பார்த்த மீடியா!

ஜப்பானை சேர்ந்த ஒருவர் கடந்த 12 ஆண்டுகளாகத் தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குவதாகக் கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

“12 வருசமா தினமும் 30 நிமிஷம்தான் தூங்குறேன்” : அதிர்ச்சி கொடுத்த மனிதர் - சோதித்துப் பார்த்த மீடியா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒரு மனிதனுக்கு நல்ல சாப்பாடு எவ்வளவு முக்கியமோ அதுபோல் நல்ல தூக்கமும் முக்கியம். நன்றாகத் தூக்கம் இல்லை என்றால் உடலில் தேவையில்லாத நோய்கள் வரும் என தொடர்ந்து மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

அதேபோல் சராசரியாக ஒரு மனிதன் குறைந்தபட்சம் 6 மணி நேரமாவது தூங்கவேண்டும் என மருத்துவ உலகம் கூறிவருகிறது. நம்மால் ஒருநாள் அல்லது இரண்டு நாள் தூங்காமல் முழித்து கொண்டிருந்தாலே அடுத்த இரண்டு நாட்களுக்குத் தலைவலி, உடல் வலி, மனச் சோர்வு போன்ற பாதிப்புகளை எதிர்கொள்வோம்.

இந்நிலையில் ஜப்பானை சேர்ந்த ஒருவர் கடந்த 12 ஆண்டுகளாகத் தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குவதாக கூறியுள்ளது உலகம் முழுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் டேய்சுகே ஹோரி. இவர்தான் தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே துங்கி வருகிறார். இப்படி குறைந்த நேரம் மட்டுமே உறங்குவதால் உடல் ஆரோக்கியத்துடனும், புத்துணர்ச்சியுடனும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் இவர் குறைந்த நேரம் உறங்குவோர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.

“12 வருசமா தினமும் 30 நிமிஷம்தான் தூங்குறேன்” : அதிர்ச்சி கொடுத்த மனிதர் - சோதித்துப் பார்த்த மீடியா!

இந்த சங்கத்தில் இருப்பவர்களுக்கு குறைந்த நேரத்தில் எப்படி உறங்குவது என்பது குறித்தான பயிற்சியும் அளித்து வருகிறார். இவரின் இந்த நடவடிக்கையால் ஆச்சரியமடைந்த ஜப்பானைச் சேர்ந்த ஊடகம் ஒன்று இவரின் தினசரி நடவடிக்கை கண்காணிக்க அவரிடம் அனுமதி கேட்டது.

அந்த ஊடகத்திற்கு டேய்சுகே ஹோரியும் மூன்று நாட்களுக்கு அனுமதி கொடுத்தார். இந்த ஊடகக்குழுவினர் இவர் எப்படி உறக்கத்தைத் தவிர்க்கிறார், அந்த சமயத்தில் என்னென்ன செய்கிறார் என்பதை கண்காணித்தார்கள்.

முதல்நாளில், ஹோரி காலை 8 மணிக்கு எழுந்து ஜிம்மிற்குச் சென்று பயிற்சி செய்கிறார். பின்னர் படிப்பது, எழுதுவது என அன்றைய தினத்தைக் கடத்துகிறார். பின்னர் அதிகாலை 2 மணியளவில் தூங்கி அடுத்த 26 நிமிடங்களில் எழுந்து மீண்டும் ஜிம்மிற்குச் சென்று பயிற்சி செய்கிறார்.

“12 வருசமா தினமும் 30 நிமிஷம்தான் தூங்குறேன்” : அதிர்ச்சி கொடுத்த மனிதர் - சோதித்துப் பார்த்த மீடியா!

இதையடுத்து சில நண்பர்களுடன் வெளியே உலாவச் செல்கிறார். மேலும் இரவு நேரங்களில் வீடியோ கேம் விளையாடுகிறார். பிறகு மீண்டும் படிப்பது, எழுதுவது, நண்பர்களுடன் இருப்பது என பொழுதைக் கழித்துள்ளார். இப்படித்தான் ஊடகத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்ட மூன்று நாட்களையும் அவர் கடந்துள்ளார்.

மேலும் தூக்கம் வராமல் இருப்பதற்காக காஃஃபீன் உட்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். ஹோரி தனது தூங்கும் நேரத்தை படிப்படியாக பல ஆண்டுகளாக குறைத்ததாக கூறியுள்ளார்.

இருந்தபோதும் ஹோரியின் இந்த நடவடிக்கையை பலரும் ஏற்க மறுத்துள்ளனர். கடந்த 12 ஆண்டுகளில் தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குகிறார் என்பதை நம்புவது கடினமாக உள்ளதாகவும் ஜப்பான் மக்கள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories