உலகம்

'மக்களை மிரட்டும் மற்றொரு அபாயகரமான வைரஸ்' : வெகுவேகமாகப் பரவும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

டெல்டா வைரஸை விட பல மடங்கு வீரியம் மிக்க ம்யூ (mu) வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

'மக்களை மிரட்டும் மற்றொரு அபாயகரமான வைரஸ்' : வெகுவேகமாகப் பரவும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகமே இன்னும் கொரோனாவில் பிடியிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகிறது. மேலும் கொரோனா தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசிகளைக் கண்டுபிடித்து மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது. இருந்தபோதும் கொரோனா தொற்று ஆல்ஃபா, டெல்டா என உருமாறிக் கொண்டே வருகிறது.

இந்நிலையில், டெல்டா வைரஸை விட பல மடங்கு ஆபத்தான உருமாறிய ம்யூ (mu) வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக நாடுகளை உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வகை வைரஸ் ஜனவரி மாதம் கொலம்பியாவில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தென் அமெரிக்க நாடுகளிலும், ஐரோப்பியாவிலும் 'ம்யூ' வகை உருமாறிய கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. கொலம்பியாவில் 39 விழுக்காடு இந்த தொற்று பாதித்துள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த 'ம்யூ' வைரஸ் பரிசோதனையில்கூட சிக்காமல் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் வேகமாகப் பரவக்கூடியது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தொற்றைத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தென் ஆப்ரிக்காவில் சி.1.2 என்ற புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு இன்னும் உலக சுகாதார அமைப்பு பெயர் வைக்கவில்லை. 'ம்யூ', 'சி.1.2' ஆகிய புதிய வைரஸ்கள் இந்தியாவில் கண்டறியப்படவில்லை என்றும் மக்கள் அச்சப்பட வேண்டாம் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories