உலகம்

“ரிக்ஷாவில் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை” : பாகிஸ்தானில் அடுத்தடுத்து அரங்கேறும் அட்டூழியங்கள்!

பாகிஸ்தானில் ரிக்ஷாவில் சென்ற பெண்ணை முத்தமிட்டு வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“ரிக்ஷாவில் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை” : பாகிஸ்தானில் அடுத்தடுத்து அரங்கேறும் அட்டூழியங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாகிஸ்தானில் சுதந்திர தினத்தன்று டிக்டாக்கில் பிரபலமடைந்த பெண்ணை 400க்கும் மேற்பட்ட கும்பல் பாலியல் தொல்லை செய்து, ஆடைகளைக் கிழத்தது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொடூர சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் இதேபோன்ற மற்றொரு சம்பவம் பாகிஸ்தானில் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியளித்துள்ளது.

இந்த வீடியோவில், ரிக்ஷா வண்டி ஒன்று சாலையில் சென்று கொண்டிருக்கிறது. இதில் இரண்டு பெண்கள் அமர்ந்து கொண்டிருக்கின்றனர். அப்போது இருசக்கர வாகனம் ஒன்று ரிக்ஷாவின் அருகே வருகிறது.

அப்போது, திடீரென வாலிபர் ஒருவர் ரிக்ஷாவில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணின் கன்னத்தில் முத்தமிடுகிறார். பிறகு உடனே அங்கிருந்து ஓடிவிடுகிறார். இதைச் சற்றும் எதிர்பாராத அந்தப் பெண் அதிர்ச்சியடைந்து என்னசெய்வது எனத் தெரியாமல் அப்படியே அமர்ந்துள்ளார்.

அப்போது, ரிக்ஷாவில் இருந்த மற்றொரு பெண் தனது காலணியை கழட்டி இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது வீசுகிறார். மேலும் ரிக்ஷாவை சுற்றி வாகனங்கள் சூழ்ந்துகொள்கின்றன. அந்த இருசக்கர வாகனத்தில் பாகிஸ்தான் தேசியக்கொடியும் இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் தொடர்ச்சியாகப் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. எனவே பெண்களுக்குப் பாதுகாப்பு வழக்க வேண்டும் என்றும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

banner

Related Stories

Related Stories