உலகம்

“ஒரே ஒருவருக்கு கொரோனா தொற்று... மொத்த நாட்டுக்கும் முழு ஊரடங்கு” : எங்கு தெரியுமா?

நியூசிலாந்தில் புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

“ஒரே ஒருவருக்கு கொரோனா தொற்று... மொத்த நாட்டுக்கும் முழு ஊரடங்கு” : எங்கு தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகமே கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக கொரோனா தொற்றின் தாக்கத்தால் சிக்கித் தவித்து வருகிறது. மக்களைத் தொற்றிலிருந்து காப்பாற்றத் தடுப்பூசிகள் கண்டுபிடித்துச் செலுத்தப்பட்டாலும், தொற்று உருமாறிக்கொண்டே வருவது விஞ்ஞானிகளுக்குச் சவாலாகவே இருந்து வருகிறது.

இருந்தபோதும் உலக நாடுகள் கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றப் போராடிக்கொண்டே இருக்கிறார்கள். மேலும் பல நாடுகள் கொரோனா முதல் அலையைக் கட்டுப்படுத்தி, கொரோனாவை வெல்ல முடியும் என்று நிரூபித்தும் காட்டினர்.

அப்படி நிரூபித்துக் காட்டியதில் நியூசிலாந்து நாடும் ஒன்று. 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நாடு கடுமையாகக் கட்டுப்பாடுகளை விதித்து, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தி உலகத்திற்கே வழிகாட்டியாக இருந்தது.

“ஒரே ஒருவருக்கு கொரோனா தொற்று... மொத்த நாட்டுக்கும் முழு ஊரடங்கு” : எங்கு தெரியுமா?

மேலும் நியூசிலாந்தில் கொரோனா தொற்றால் இதுவரை 26 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களாகப் புதிதாக அங்கு யாருக்கும் தொற்று ஏற்படாமல் இருந்துவந்தது. இந்நிலையில் நியூசிலாந்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஆக்லாந்து நகரில் புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆறு மாதங்கள் கழித்து ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், நியூசிலாந்து அரசு அதிரடியாக நாடு முழுவதும் மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா கண்டறியப்பட்ட நகரில் ஏழு நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories