உலகம்

17 யானைகளுக்காக இடம்பெயர்ந்த 1.5 லட்சம் மக்கள்: 25000 அதிகாரிகள், பல கோடி செலவு செய்து பாதுகாக்கும் சீனா!

சீனாவின் யுனான் மாகாணத்தில் 17 யானைகளுக்காக் 1.5 லட்சம் மக்களைக் இடம் பெயர்ந்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

17 யானைகளுக்காக இடம்பெயர்ந்த 1.5 லட்சம் மக்கள்: 25000 அதிகாரிகள், பல கோடி செலவு செய்து பாதுகாக்கும் சீனா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காடுகள் அழிக்கப்பட்டு வருவதால், வன விலங்குகள் தண்ணீர் மற்றும் பாதை மாறி மக்களின் இருப்பிடங்களுக்கு வந்து செல்கிறது. இதனால் விலங்குகளுக்கும், மக்களுக்கு மோதல் ஏற்படுகிறது. இது உலகம் முழுவதும் பெரும் பிரச்சனையாகவே இருந்து வருகிறது.

இப்படி ஊருக்குள் வரும் விலங்குகளை மீண்டும் விரட்டி அடிக்கப்பட்டு வருகிறதே தவிர இதற்கான தீர்வுகாண யாரும் முன்வருவதில்லை. காடுகள் அழிக்கப்பட்டதால்தான் விலங்குகள் காட்டை விட்டு வெளியே வருகிறது என்ற உண்மையை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இந்நிலையில், சீனாவில் யானைக் கூட்டம் ஒன்று மக்கள் குடியிருப்பை நோக்கி வருவதை அறிந்த அரசு ஒன்றரை லட்சம் மக்களை இடம் பெயர்வு செய்துள்ளது. பல மாதங்களாகத் தொடர்ந்து நகர்ந்து வரும் இந்த யானைக் கூட்டத்திற்கும், மனிதர்களுக்கும் எந்தவிதமான இடையூறும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இந்த முடிவை சீன அரசு எடுத்துள்ளது.

17 யானைகளுக்காக இடம்பெயர்ந்த 1.5 லட்சம் மக்கள்: 25000 அதிகாரிகள், பல கோடி செலவு செய்து பாதுகாக்கும் சீனா!

இந்த யானைக் கூட்டத்தைக் கண்காணிப்பதற்காக ட்ரோன் கேமராக்கள் உதவியுடன் 25 ஆயிரத்திற்கும் அதிகமான போலிஸார் கண்காணித்து வருகிறார்கள். யானைகள் எங்கு எங்கு செல்கிறதோ அந்த வழியில் இருக்கும் மக்களை எல்லாம் முன்கூட்டியே அந்த இடத்திலிருந்து வெளியேற்றி வருகிறார்கள்.

சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள சரணாலயம் ஒன்றிலிருந்து இந்த யானைக் கூட்டம் 17 மாதங்களுக்கு முன்பு மக்கள் வசித்து வரும் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த யானைகள் கூட்டம் காடுகள் காடுகள், வயல்கள், நகரங்கள் என 500 கிலோ மீட்டர் தூரத்துக்கு நகர்ந்துள்ளது. இப்படி யானைகள் நகர்த்து வந்ததில் பல கோடி ரூபாய் மதிப்பிலான விளைநிலங்கள், குடியிருப்புகளைச் சேதமாக்கியுள்ளது. இந்த யானைக் கூட்டம் மீண்டும் தங்களின் இருப்பிடத்திற்கே திரும்பத் தொடங்கியுள்ளன.

banner

Related Stories

Related Stories