உலகம்

“கொரோனாவைக் கண்டு அஞ்ச வேண்டாமா?” : அதிபர் ட்ரம்ப் கருத்தால் ஆத்திரமடைந்த ‘கேப்டன் அமெரிக்கா’ !

கொரோனா வைரஸைக் குறித்துக் கருத்துத் தெரிவித்த அதிபர் ட்ரம்ப்பை நடிகர் க்றிஸ் எவான்ஸ் கடுமையாகச் சாடியுள்ளார்.

“கொரோனாவைக் கண்டு அஞ்ச வேண்டாமா?” : அதிபர் ட்ரம்ப் கருத்தால் ஆத்திரமடைந்த ‘கேப்டன் அமெரிக்கா’ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சீனாவில் தொற்றத் துவங்கிய கொரோனா வைரஸ் அங்கு ஏற்படுத்திய உயிர்ச்சேதம், பாதிப்பைக் காட்டிலும் ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உலக வல்லரசான அமெரிக்கா, கொரோனா தொற்றினால் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்து வருகிறது.

கொரோனா தொற்றையும், பலியையும் கட்டுப்படுத்தாமல் வல்லரசு அதிபர் திணறி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. 5 மாதங்களில் அமெரிக்காவில் கொரோனா வைரஸுக்கு 2.15 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,723,721 ஆக அதிகரித்துள்ளது. உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் 215,836 பேர் பலியாகியுள்ளனர்.

“கொரோனாவைக் கண்டு அஞ்ச வேண்டாமா?” : அதிபர் ட்ரம்ப் கருத்தால் ஆத்திரமடைந்த ‘கேப்டன் அமெரிக்கா’ !

இதனிடையே அந்நாட்டின் அதிபர் டொனால் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ட்ரம்ப்க்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். வீட்டில் இருந்த சிகிச்சைப் பெற்று வந்த ட்ரம்புக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்த காரணத்தால், வால்டர் ரீடில் உள்ள ராணுவ மருத்துவ மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து 3 இரவுகள் சிகிச்சைப் பெற்றுவந்த ட்ரம்ப் இரண்டு நாட்களுக்கு முன்பாக வெள்ளை மாளிகை திரும்பினார். ஆனால் அதிபர் டொனால்டு ட்ரம்ப் முழுவதுமாக குணமடைந்தார் என்று இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் அந்நாட்டு அரசு வெளியிடவில்லை.

இந்த நிலையில், “கொரோனாவைக் கண்டு யாரும் அச்சப்படத் தேவையில்லை” என அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார். அதிபரின் இத்தகைய கருத்துக்கு கடும் கண்டனம் எழுந்து வருகிறது.

இந்நிலையில், அதிபர் ட்ரம்பை மார்வெல் நிறுவனத்தின் ‘கேப்டன் அமெரிக்கா’ என்ற கதாபாத்திரத்தில் நடத்த பிரபல நடிகர் க்றிஸ் எவான்ஸ் கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக நடிகர் க்றிஸ் எவான்ஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கொரோனாவைக் கண்டு பயப்பட்ட வேண்டாமா?

நீங்கள் சிறப்பான மருந்துகளை உட்கொண்டு 24 மணி நேரமும் சிறந்த மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தீர்கள். ஆனால், இதேப்போன்ற வசதிகள் இங்கு எல்லாருக்கும் கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா? இந்த வித்தியாசம் உங்களுக்கு நன்றாக தெரியும். ஆனாலும் அதைப் பற்றி உங்களுக்கு எந்தக் கவலை இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

6 மாதங்களுக்கு மேலாக வேலைகளுக்குச் செல்லமுடியாமல் அமெரிக்க மக்கள் கடும் இன்னல்களை சந்திக்கும் வேளையில், அதிபர் ட்ரம்பின் இத்தகைய பேச்சு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories