உலகம்

கருந்துளை, பால்வெளி பற்றி ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் 3 பேருக்கு ‘இயற்பியலுக்கான நோபல் பரிசு’!

2020ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு ரோஜர் பென்ரோஸ், ரிய்ன்ஹார்ட் கென்செல் மற்றும் ஆன்ட்ரியா கெஸ் ஆகிய 3 பேருக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருந்துளை, பால்வெளி பற்றி ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் 3 பேருக்கு ‘இயற்பியலுக்கான நோபல் பரிசு’!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள கரோனலின்ஸ்கா இன்ஸ்ட்டியூட்டில் உள்ள நோபல் பரிசுக் குழு இயற்பியல் துறைக்கான விருதை இன்று அறிவித்தது. ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும் மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், முதல் கட்டமாக மருத்துவத்துக்கான 2020ம் ஆண்டுக்கான நோபல் பரிசு நேற்று பிரிட்டன், அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டது.

அமெரிக்க விஞ்ஞானி ஹார்வே ஜே.ஆல்டர் (வைராலஜிஸ்ட்), பிரிட்டன் விஞ்ஞானி மைக்கேல் ஹாட்டன், அமெரிக்க விஞ்ஞானி சார்லஸ் எம். ரைஸ் (பேராசிரியர் ராக்கர் ஃபெல்லர் பல்கலைக்கழகம்) ஆகியோருக்கு கூட்டாக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது 2020ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அதில், கருந்துளை பற்றிய ஆய்வுக்காகவும், விண்மீனின் மையத்தில் அதிசயிக்கத்தக்க பொருளை கண்டுபிடித்ததற்காகவும் மூன்று பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், கருந்துளை தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட ரோஜர் பென்ரோசுக்கும், விண்மீன் மையத்தில் அதிசயிக்கத்தக்க பொருளை கண்டுபிடித்ததற்காக ரின்ஹெர்ட் கென்செல், ஆன்ட்ரியா கெஸ் ஆகியோருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 7-ம் தேதி நாளை வேதியியல், 8ம் தேதி இலக்கியம், 9ம் தேதி அமைதி, 10ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories