உலகம்

“சினிமா தயாரிப்பாளர்களாக களம் இறங்கிய இளவரசர் ஹாரி-மேகன் தம்பதி” : Netflix நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம்!

இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்கெல் தம்பதியினர் தற்போது ஹாலிவுட் தயாரிப்பாளர்களாக Netflix நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் பணிபுரியும் உறுப்பினர்களாக நிறுத்தப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஹாரி மற்றும் மேகன் மார்கெல் தற்போது ஹாலிவுட் தயாரிப்பாளர்களாக அகிவிட்டார்கள்.

இவர்கள் இன்னும் பெயரிடப்படாத தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி நெட்ஃபிக்ஸ் உடன் ஒரு மல்டிஇயர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அதில் ஆவணப்படங்கள், ஆவணத் தொடர்கள், திரைப்படங்கள், ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் என தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

“சினிமா தயாரிப்பாளர்களாக களம் இறங்கிய இளவரசர் ஹாரி-மேகன் தம்பதி” : Netflix நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம்!

"எங்கள் கவனம் ஒரு சிறந்த படைப்பை உருவாக்குவதில் தான் இருக்கும், அதுதான் நம்பிக்கையைத் தருகிறது. நாங்களும் ஒரு புதிய பெற்றோர்களாக இருப்பதால் சில உத்வேகமூட்டும் குடும்ப நிகழ்ச்சிகளை உருவாக்குவது எங்கள் கடமையாக எடுத்துக் கொண்டுள்ளோம்” என்று ஹாரி தம்பதியினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

உலகளவில் 193 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்ட நெட்ஃபிக்ஸ் நிறுவனத்திற்கு இவர்களின் தயாரிப்புகள் பிரத்தியேகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories