உலகம்

“தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரேசிலை முந்திய இந்தியா” : உலகளவில் கொரோனா அப்டேட்ஸ்!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8.46 லட்சத்தை தாண்டியுள்ளது.

“தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரேசிலை முந்திய இந்தியா” : உலகளவில் கொரோனா அப்டேட்ஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.

கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. இன்னும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு தொடர்கிறது. உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 25,164,818 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 846,757 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 24 மணி நேரத்தில் 75,760 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,843 பேருக்கும், பிரேசிலில் 34,360 பேருக்கும் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

“தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரேசிலை முந்திய இந்தியா” : உலகளவில் கொரோனா அப்டேட்ஸ்!

உலக நாடுகளில் அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 6,139,078 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 186,855 பேர் பலியாகினர். அமெரிக்காவுக்கு அடுத்து பிரேசில் உள்ளது. பிரேசிலில் 3,846,965 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 119,594 பேர் பலியாகினர்.

இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்தில் வைரஸ் தொற்றின் தீவிரம் தணியத் தொடங்கிய நிலையில், பிரேசில், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருகிறது.

அதேப்போல் 4வது இடத்தில் இருந்த இந்தியா 3வது இடத்திற்குச் சென்றுள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை இந்தியாவில் 3,539,712 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலியானோர் எண்ணிக்கை 63,657 ஆக அதிகரித்துள்ளது.

“தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரேசிலை முந்திய இந்தியா” : உலகளவில் கொரோனா அப்டேட்ஸ்!

இந்தியாவைத் தொடர்ந்து, ரஷ்யா - 985,346, பெரு - 639,435, தென் ஆப்பிரிக்கா - 639,435, கொலம்பியா - 599,914, மெக்சிகோ - 591,712, ஸ்பெயின் - 455,621, சிலி - 408,009 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, தென் கிழக்கு ஆசியா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளை தவிர உலகின் மற்ற பகுதிகளில் கொரோனா வேகம் படிப்படியாக குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் இன்னும் அதிகரித்து கொண்டே செல்வதாகவும், இருப்பினும் உலகளவில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் குறைந்து வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

banner

Related Stories

Related Stories