உலகம்

“இளைஞர்களே அதிகமாக கொரோனாவை பரப்புகிறார்கள்” - உலக சுகாதார நிறுவனம் தகவல்!

20 வயது முதல் 40 வயதுள்ளவர்களே கொரோனாவை அதிகம் பரப்புகிறார்கள் என உலக சுகாதர நிறுவனம் தெரிவித்துள்ளது.

“இளைஞர்களே அதிகமாக கொரோனாவை பரப்புகிறார்கள்” - உலக சுகாதார நிறுவனம் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இளைஞர்களே அதிக அளவில் கொரோனாவை பரப்புவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதை உணராமலேயே இருப்பதால் 20 முதல் 40 வயதுள்ளவர்கள் மூலம் கொரோனா மற்றவர்களுக்குப் பரவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வயதில் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் அறிகுறிகள் இல்லாமலும், சில நேரம் மிதமான அறிகுறிகள் இருப்பதாலும் அவர்கள் வெளியில் உலாவுவதால் கொரோனா அவர்கள் மூலம் எளிதாகப் பரவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசியுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் மேற்கு பசிபிக்கின் பிராந்திய இயக்குநர் டகேஷி கஸாய் ”இந்த நிலை மிகவும் வயதான, ஏற்கெனவே நீண்ட காலமாக உடலில் குறைபாடுள்ளவர்கள், அதிக மக்கள் நெருக்கடி உள்ள இடங்களில் வாழும் மக்களுக்கு பரவுவதற்குக் காரணமாக உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் பிப்ரவரி 24 முதல் ஜூலை 12 வரை உள்ள காலகட்டத்தில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலை அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரவுகளின் படி 4 வயதுக்குள்ளான குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது 0.3% சதவீதத்திலிருந்து 2.2 % சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோல் பாதிக்கப்பட்டவர்களில் 5 முதல் 14 வயதுள்ளவர்களின் எண்ணிக்கை 0.8 % சதவீதத்திலிருந்து 4.6% சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories