Corona Virus

தமிழகத்தில் இன்று 5,709 பேருக்கு கொரோனா தொற்று... 121 பேர் உயிரிழப்பு - 6 ஆயிரத்தைக் கடந்த பலி எண்ணிக்கை!

தமிழகத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 6,007 ஆக அதிகரித்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 5,709 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,49,654 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 65,075 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 37,12,657 பேருக்கு மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னையில் இன்று 1,182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று 4,527 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 5,709 பேருக்கு கொரோனா தொற்று... 121 பேர் உயிரிழப்பு - 6 ஆயிரத்தைக் கடந்த பலி எண்ணிக்கை!

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தவர்களில் இன்று மட்டும் 5,850 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 89ஆயிரத்து 787 ஆக உள்ளது. தற்போது 53,860 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 121 பேர் உயிரிழந்தனர். அதில், 32 பேர் தனியார் மருத்துவமனையிலும், 89 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா பலி 6,007 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories