அரசியல்

NDPC விரிவாக்கம் முதல் 25 லட்சம் கோடி கடன் பற்றாக்குறை வரை.. திமுக எம்.பி-க்கள் அடுக்கடுக்கான கேள்வி!

NDPC விரிவாக்கம் முதல் 25 லட்சம் கோடி கடன் பற்றாக்குறை வரை.. திமுக எம்.பி-க்கள் அடுக்கடுக்கான கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜன. 28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டை பிப்.1 மக்களவையில் தாக்கல் செய்தார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த பட்ஜெட்டில் மக்களுக்கு தேவையான உருப்படியான ஒரு விசயமும் இல்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், வழக்கம்போல இந்த முறையும் தமிழ்நாட்டுக்கு தேவையான ஒரு அறிவிப்பும் இடம்பெறவில்லை. இதற்கும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

இந்த சூழலில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒன்றிய அமைச்சர்களிடம் உறுப்பினர்கள் கேள்விகளும் எழுப்பினர்.

NDPC விரிவாக்கம் முதல் 25 லட்சம் கோடி கடன் பற்றாக்குறை வரை.. திமுக எம்.பி-க்கள் அடுக்கடுக்கான கேள்வி!

இதில் திமுக எம்.பி-க்கள் எழுப்பிய கேள்விகள் வருமாறு :-

=> நீதிபதிகளுக்கு எதிரான புகார்களை விசாரிக்க நடவடிக்கை! - திமுக எம். பி. டாக்டர் கனிமொழி சோமு

இந்தியத் தலைமை நீதிபதி மற்றும் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளால் பெறப்பட்ட நீதிபதிகளுக்கு எதிரான புகார்களை விசாரிக்கும் நடைமுறைகள் குறித்து திமுக எம்.பி. டாக்டர் கனிமொழி சோமு கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் விசாரித்து முடிக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் அடையாளங்களை வெளியிடாமல் முடித்து வைக்கப்பட்ட அல்லது அறிவுரை வழங்கப்பட்ட வழக்குகளின் விவரங்கள் என்ன என்றும் அவர் கேட்டுள்ளார்.

NDPC விரிவாக்கம் முதல் 25 லட்சம் கோடி கடன் பற்றாக்குறை வரை.. திமுக எம்.பி-க்கள் அடுக்கடுக்கான கேள்வி!

=> மண்டல வாரியாக உச்சநீதிமன்றத்தின் கிளைகள் அமைக்கப்படுமா? - திமுக எம்.பி. பி. வில்சன் கேள்வி

உச்ச நீதிமன்றத்தின் மண்டலக் கிளைகளை அமைப்பதற்கான சாத்தியங்களை ஆய்வு செய்வதற்கு இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் திமுக எம்.பியும் வழக்கறிஞருமான பி. வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார். அதன் விவரங்கள் பின்வருமாறு:

உயர் நீதித்துறையில் நீதிபதிகள் நியமனத்தில் சமூகப் பன்முகத்தன்மை மற்றும் சமூகப் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? 2021 ஆம் ஆண்டு முதல் உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட பட்டியல் சாதி, பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொதுப் பிரிவு, பெண்கள் மற்றும் சிறுபான்மை நீதிபதிகளின் எண்ணிக்கை என்ன? 01.02.2026 நிலவரப்படி உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் உள்ள நீதிபதி பணியிடங்களின் காலியிடங்கள் எவ்வளவு?

NDPC விரிவாக்கம் முதல் 25 லட்சம் கோடி கடன் பற்றாக்குறை வரை.. திமுக எம்.பி-க்கள் அடுக்கடுக்கான கேள்வி!

=> கள்ளக்குறிச்சியில் உணவு பதப்படுத்துதல் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துக! - திமுக கள்ளக்குறிச்சி எம்.பி. மலையரசன்

கள்ளக்குறிச்சி தொகுதியில் குளிர்பதனக் கிடங்குகள், ஒருங்கிணைந்த விநியோகச் சங்கிலிகள் மற்றும் உணவு பதப்படுத்தும் அலகுகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. மலையரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா, மெகா உணவுப் பூங்காக்கள் மற்றும் குளிர்பதனச் சங்கிலி கூறுகள் போன்ற முக்கியத் திட்டங்களின் கீழ் அனுமதிக்கப்பட்ட, நடைபெற்று வரும் மற்றும் முடிக்கப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் யாவை? தமிழ்நாட்டின் வேளாண்-காலநிலைத் திறனைச் சிறப்பாகக் கருத்தில் கொண்டு, உள்நாட்டு, பாரம்பரிய மற்றும் மண்டல வாரியாக உணவுப் பொருட்களை ஊக்குவிப்பது உட்பட, உணவு பதப்படுத்துதல் துறைக்குள் பன்முகத்தன்மையை மேம்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள முன்முயற்சிகள் யாவை? சர்வதேச சந்தைகளில் இந்திய உணவுப் பொருட்களின் போட்டித்தன்மையை மேம்படுத்த அரசாங்கம் முன்மொழியும் திட்டங்கள் யாவை? ஏற்றுமதி சார்ந்த உள்கட்டமைப்பு, தரப் பரிசோதனை வசதிகள் மற்றும் தளவாடங்களை வலுப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை? என்றும் அவர் கேட்டுள்ளார்.

NDPC விரிவாக்கம் முதல் 25 லட்சம் கோடி கடன் பற்றாக்குறை வரை.. திமுக எம்.பி-க்கள் அடுக்கடுக்கான கேள்வி!

=> காதிப்பொருட்களுக்கான இணைய விநியோக வசதி - தர்மபுரி திமுக எம்.பி. அ. மணி

கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழ்நாட்டில் உள்ள காதி மற்றும் கிராமத் தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகளை, குறிப்பாக உற்பத்தி, விற்பனை மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் அரசாங்கம் ஆய்வு செய்துள்ளதா என தர்மபுரி எம்.பி. அ. மணி நாடாளுமன்றத்தில் பின்வரும் கேள்வி எழுப்பியுள்ளார்:

மாநிலத்தில் உள்ள காதி நிறுவனங்கள், பதிவுசெய்யப்பட்ட கைவினைஞர்கள் மற்றும் செயல்படும் அலகுகளின் எண்ணிக்கை மற்றும் உள்கட்டமைப்பை ஊக்குவிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? விளிம்பு நிதி மானியம், சந்தைப்படுத்துதலில் உதவி, மற்றும் மூலப்பொருள் கிடைப்பதிலுள்ள தாமதங்களை சரிசெய்யும் முயற்சி போன்றவற்றால் தொழிலாளர்கள் கண்ட பயன்கள் என்ன? அதற்காக பயன்படுத்தப்பட்ட நிதி எவ்வளவு? கைவினைஞர்களின் வருமானத்தை மேம்படுத்துவதற்காக, சந்தைத் தொடர்புகளை வலுப்படுத்தவும், பிராண்ட் விளம்பரத்தை மேற்கொள்ளவும் மற்றும் காதிப் பொருட்களை மின் வணிகத் தளங்களுடன் ஒருங்கிணைக்கவும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் யாவை?

NDPC விரிவாக்கம் முதல் 25 லட்சம் கோடி கடன் பற்றாக்குறை வரை.. திமுக எம்.பி-க்கள் அடுக்கடுக்கான கேள்வி!

=> சிறு நிறுவனங்களுக்கான 25 லட்சம் கோடி கடன் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை என்ன? - பெரம்பலூர் திமுக எம்.பி. அருண் நேரு

2024-25 மற்றும் 2025-26 நிதியாண்டுகளில் தங்கள் பதிவை ரத்து செய்த அல்லது செயல்பாடுகளை நிறுத்திய பதிவு செய்யப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSME) மொத்த எண்ணிக்கை எவ்வளவு என்றும் பல கடன் திட்டங்கள் இருந்தபோதிலும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனத் துறைக்கான கடன் பற்றாக்குறை (28 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது) அதிகரித்து வருவது ஏன் என கேட்டும் திமுக பெரம்பலூர் மக்களவை தொகுதி உறுப்பினர் அருண் நேரு கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் கேட்டுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டில் செயல்படாத சொத்துக்களாக (NPAs) மாறியுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனக் கடன்களின் சதவீதம் எவ்வளவு? அவசரகால கடன் உத்தரவாதத் திட்டம் (ECLGS) சிறு நிறுவனங்களை நிரந்தரமாக மூடும் நிலையிலிருந்து காப்பாற்றத் தவறியதற்கான காரணங்கள் யாவை? குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மோசடி கடன் வழங்கும் செயலிகளிடமிருந்து பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவை?

NDPC விரிவாக்கம் முதல் 25 லட்சம் கோடி கடன் பற்றாக்குறை வரை.. திமுக எம்.பி-க்கள் அடுக்கடுக்கான கேள்வி!

=> என்.டி.பி.சி விரிவாக்கம் பற்றி உறுதியான செய்திகளை வெளியிடுக! - சேலம் திமுக எம்.பி. செல்வகணபதி

தேசிய அனல் மின் கழகம் (என்.டி.பி.சி) நாட்டின் பல்வேறு இடங்களில் சுமார் 30 ஜிகாவாட் திறன் கொண்ட சொந்த அணுசக்தி திட்டங்களை அமைப்பது குறித்து பரிசீலித்து வருவது குறித்து திமுக சேலம் மக்களவை உறுப்பினர் செல்வகணபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

2047-ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி திறனைப் பெறுவதென அரசாங்கம் முடிவெடுத்திருப்பதன் காரணம் என்ன? என்.டி.பி.சி தொழில்நுட்பம் மற்றும் எரிபொருள் துறையில் பன்னாட்டு கூட்டுமுயற்சிகளை பெற விளைகிறதா? என்.டி.பி.சி 2032-ஆம் ஆண்டிற்கு 2 ஜிகாவாட் அணுசக்தி திறனை இலக்காகக் கொண்டுள்ளது பற்றி மேலும் தகவல்களை அளிக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories