உலகம்

ஆயிரக்கணக்கான சீன செயலிகளை அதிரடியாக நீக்கிய ஆப்பிள் நிறுவனம்..!!

ஜூலை முதல் வாரத்தில் மட்டும் ஆப்பிள் நிறுவனம் 2,500 கேம்களை நீக்கியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆப்பிள் நிறுவனம் அதனுடைய சீன ஆப்ஸ்டோரிலிருந்து 29,800 ஆப்களை நீக்கியுள்ளது. அதில் 26,000 கேம் ஆப்களும் அடக்கம். இந்த தகவல்கள் கிமாய் என்ற நிறுவனத்தின் ஆய்வறிக்கையிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில், ஜூலை மாத இறுதிக்குள் அரசிடமிருந்து உரிமம் பெற்ற உரிம எண்களை சமர்பிக்க வேண்டும் என கேம் ஆப்களின் நிறுவனங்களுக்கு ஆப்பிள் காலக்கெடு விதித்திருந்தது.

ஆயிரக்கணக்கான சீன செயலிகளை அதிரடியாக நீக்கிய ஆப்பிள் நிறுவனம்..!!

சீனாவின் ஆண்டிராய்ட் ஆப் ஸ்டோர்கள் இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டே நீண்ட காலமாக இயங்கி வருகின்றன. ஆனாலும் ஏன் ஆப்பிள் இந்த காலக்கெடுவை விதித்தது என்பது தெரியவில்லை.

ஜூலை முதல் வாரத்தில் மட்டும் ஆப்பிள் நிறுவனம் 2,500 கேம்களை நீக்கியுள்ளது. அதில் ஸிங்கா, சூப்பர்செல் போன்ற கேம்களும் அடக்கம். சீன அரசாங்கம் பல காலமாய் அந்நாட்டினுடைய கேமிங் நிறுவனங்கள் மீது கடுமையான விதிமுறைகளை விதித்து கண்காணித்து வருகிறது.

ஆயிரக்கணக்கான சீன செயலிகளை அதிரடியாக நீக்கிய ஆப்பிள் நிறுவனம்..!!

இந்த உரிமங்களை பெறுவது என்பது மீக நீண்ட காலம் எடுக்கக்கூடியதாகவும், சிக்கலானதாகவும் உள்ளதாக கேமிங் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இது சிறிய மற்றும் நடுத்தர கேம் டிவெலெப்பர்களின் வருமானத்தை கடுமையாக பாதித்துள்ளதாகவும், சீனாவில் IOS கேம் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

banner

Related Stories

Related Stories