உலகம்

“1.48 கோடி பேர் பாதிப்பு - 6.13 லட்சம் பேர் பலி” : உலக நாடுகளைச் சிதைக்கு கொரோனா தொற்று!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.48 கோடியைத் தாண்டியுள்ளது.

“1.48 கோடி பேர் பாதிப்பு - 6.13 லட்சம் பேர் பலி” : உலக நாடுகளைச் சிதைக்கு கொரோனா தொற்று!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.

கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. இன்னும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு தொடர்கிறது. உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 14,852,700 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 613,213 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர்.

உலக நாடுகளில் அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 3,961,429பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 143,834 பேர் பலியாகினர். அமெரிக்காவுக்கு அடுத்து பிரேசில் உள்ளது. இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்தில் வைரஸ் தொற்றின் தீவிரம் தணியத் தொடங்கிய நிலையில், இந்தியா, ரஷ்யா, பிரேசில் போன்ற நாடுகளில் கடுமையாக அதிகரித்து வருகிறது.

“1.48 கோடி பேர் பாதிப்பு - 6.13 லட்சம் பேர் பலி” : உலக நாடுகளைச் சிதைக்கு கொரோனா தொற்று!

அதேப்போல் 4வது இடத்தில் இருந்த இந்தியா 3வது இடத்திற்குச் சென்றுள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை இந்தியாவில் 1,154,917 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலியானோர் எண்ணிக்கை 28,099 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், உலகிலேயே முதல்முறையாக கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சோதனையை மனிதர்கள் மீது முழுமையாக செய்துள்ளது ரஷ்யா. மேலும் இந்த சோதனை பாதுகாப்பானது என மாஸ்கோ ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டி அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories