உலகம்

“காவல்துறையினர் இல்லாமல் மக்களை பாதுகாக்க சிறப்பு திட்டம்” : மினியாபொலிஸ் காவல்துறை விரைவில் கலைப்பு!

அமெரிக்காவில் கருப்பினத்தவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் போராட்டங்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து மினியாபொலிஸ் நகர காவல்துறையை கலைக்க அம்மாகாண அரசு முடிவெடுத்துள்ளது.

“காவல்துறையினர் இல்லாமல் மக்களை பாதுகாக்க சிறப்பு திட்டம்” : மினியாபொலிஸ் காவல்துறை விரைவில் கலைப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவின் வல்லரசு என்ற பிம்பத்தை சுக்குநூறாய் உடைத்திருக்கிறது. கொரோனா பாதிப்பு, பொருளாதார நெருக்கடி, அதிபர் தேர்தல் என பல்வேறு இக்கட்டான காலத்தை சந்திக்கும் அமெரிக்கா தற்போது நிறவெறிக்கு எதிரான போராட்டங்களையும் சந்திக்கிறது.

கடந்த மே 25ம் தேதியன்று, அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் பகுதியில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவர் நிறவெறி காரணமாக டெரிக் சாவின் என்ற போலிஸாரால் கழுத்தை நெறித்து கொல்லப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கி வருகிறது.

அப்போது ஜார்ஜ் ஃப்ளாய்ட், ‘என்னால் மூச்சு விடமுடியவில்லை; என்னைக் கொன்றுவிடாதீர்கள்’ என கதறியதும், அவரின் துடிதுடிப்புக்கு சிறிதும் இறக்கம் காட்டாமல் மேலும் தனது முழங்காலை ஜார்ஜ்ஜின் கழுத்தில் வைத்து அழுத்தம் கொடுத்ததுமான வீடியோ இணையத்தில் வெளியாகி கோடிக்கணக்கான மக்களின் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.

“காவல்துறையினர் இல்லாமல் மக்களை பாதுகாக்க சிறப்பு திட்டம்” : மினியாபொலிஸ் காவல்துறை விரைவில் கலைப்பு!

இதனை தொடர்ந்து இந்த இனவெறி தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் கறுப்பினத்தவருக்கு எதிரான துவேஷத்தை எதிர்த்தும், மக்கள் அமெரிக்க நகரங்களில் ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டத்திற்கும் கருப்பின மக்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளுக்காகவும் #BlackLivesMatter என்ற போராட்டம் அமெரிக்கா மட்டுமின்றி பல நாடுகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து கருப்பினத்தவரின் உயிரிழப்புக்கு காரணமாக காவல்துறையினர் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் கருப்பினத்தவர் மீது கால்களை வைத்து அழுத்திய காவலர் மீது இரண்டாம் நிலை கொலை வழக்கும், மற்றவர்கள் மீது கொலைக்கு உடந்தையாக இருந்ததாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் போராட்டக்காரர்கள் தங்களுடைய போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் மினியாபொலிஸ், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், வாஷிங்டன், ஆக்லாண்ட் உள்ளிட்ட நகரங்களில் சட்ட ஒழுங்கு மிகவும் சீர் குலைந்துள்ளது.

“காவல்துறையினர் இல்லாமல் மக்களை பாதுகாக்க சிறப்பு திட்டம்” : மினியாபொலிஸ் காவல்துறை விரைவில் கலைப்பு!

இந்நிலையில் கருப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்டின் கொலைக்கு காரணமான மினியாபொலிஸ் நகர காவல்துறையை கலைக்க அம்மாகாண அரசு முடிவெடுத்துள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள மினியாபொலிஸ் நகரின் கவுன்சில் தலைவர் லிசா பெண்டர், அமெரிக்கா முழுவதும் உள்ள நகரங்களிலும், தற்போதுள்ள எங்கள் காவல்துறை மற்றும் பொது பாதுகாப்பு முறைகள் எங்கள் சமூகங்களை பாதுகாப்பாக வைத்திருக்கவில்லை என்பது தெளிவாகிறது என தெரிவித்தார்.

எனவே மினியாபொலிஸ் நகரில் செயல்பட்டு வரும் காவல்துறையை முற்றிலும் கலைத்துவிட்டு புதிதாகக் கட்டமைக்க முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதனையடுத்து தற்போது மின்னியாபொலிஸ் காவல்துறையை கலைக்க வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளதாக மினியாபொலிஸ் நகர சபை உறுப்பினர் எரேமியா எலிசன் தெரிவித்துள்ளார்.

“காவல்துறையினர் இல்லாமல் மக்களை பாதுகாக்க சிறப்பு திட்டம்” : மினியாபொலிஸ் காவல்துறை விரைவில் கலைப்பு!

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “போலிஸ் அமைப்பு தோல்வியுற்றதால், காவல்துறையினர் இல்லாமல் சமூகங்களை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது என்பதற்கான பத்து படிநிலைகளை தயார் செய்துவருகிறோம். அது ஒரு அமைப்பாக செயல்படுத்த முடுவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் கறுப்பின மக்கள், அமெரிக்க இந்திய மக்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும் வரலாற்று ரீதியாக ஓரங்கட்டப்பட்ட அல்லது சேவை செய்யப்படாத பிற பங்குதாரர்களின் குரல்களை மையமாகக் கொண்டதாக அந்த அமைப்பு செயல்படும். அனைவருக்கும் சேர்ந்த, பாதுகாப்பு எப்படி இருக்கும் என்பதை நாங்கள் அடையாளம் காண்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories