உலகம்

“கறுப்பின மக்களை அடிமை வியாபாரம் செய்தவனின் சிலை அடித்து நொறுக்கப்பட்டது”: இங்கிலாந்தில் பரவும் போராட்டம்

இங்கிலாந்தில் கறுப்பின மக்களை அடிமைப்படுத்தி வியாபாரம் செய்த எட்வர்ட் கோல்ஸ்டன் சிலையை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கி ஆற்றில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“கறுப்பின மக்களை அடிமை வியாபாரம் செய்தவனின் சிலை அடித்து நொறுக்கப்பட்டது”: இங்கிலாந்தில் பரவும் போராட்டம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவரின் கழுத்துப் பகுதியில் மினியாபோலிஸ் காவல்துறை அதிகாரி முட்டியால் அழுத்தியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்தப் படுகொலைக்கு நீதி கோரியும், கறுப்பினத்தவருக்கு எதிரான துவேஷத்தை எதிர்த்தும், மக்கள் அமெரிக்க நகரங்களில் ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டத்திற்கும் கருப்பின மக்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளுக்காகவும் #BlackLivesMatter என்ற போராட்டம் அமெரிக்கா மட்டுமின்றி பல நாடுகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உலகின் பல நாடுகளில் கருப்பின மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறுகிறது. இந்த சூழலில் இங்கிலாந்தில் கறுப்பின மக்களை அடிமைப்படுத்தி வியாபாரம் செய்த எட்வர்ட் கோல்ஸ்டன் சிலையை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கி ஆற்றில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடிமை வர்த்தகர் என்று அழைக்கப்படும் எட்வர்ட் கோல்ஸ்டன் ராயல் ஆப்பிரிக்க நிறுவனத்தின் உறுப்பினராக இருந்தார். 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மேற்கு ஆப்பிரிக்க வர்த்தகத்தில் ஏகபோக உரிமையைக் கொண்டிருந்தார். இவர் ராயல் ஆப்பிரிக்க கம்பெனி (ஆர்ஏசி) நிறுவனத்தில் சேர்ந்த 1672 மற்றும் 1689க்கு இடைப்பட்ட காலத்தில் கரீபியன் மற்றும் அமெரிக்காவில் சுமார் 1,00,000 மேற்கு ஆப்பிரிக்க கருப்பின மக்களை விற்றதாக கூறப்படுகிறது.

பின்னர் லண்டனில் குடியேறிய எட்வர்ட் கோல்ஸ்டன் பிரிஸ்டல் மற்றும் லண்டனில் உள்ள பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்த ஒரு நன்கொடையாளர் என்ற நற்பெயரை வளர்க்கத் தொடங்கினார். அவர் 1721 இல் சர்ரேயின் மோர்ட்லேக்கில் இறப்பதற்கு முன் பிரிஸ்டலுக்கான எம்.பி.யாக பணியாற்றினார். அவர் இறந்த பிறகு, பிரிஸ்டலில் உள்ள ஆல் செயிண்ட்ஸ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

பின்னர் அவரின் நினைவாக பிரிஸ்டல் அருங்காட்சியகம் பகுதியில் எட்வர்ட் கோல்ஸ்டனின் வெண்கல சிலை நிறுவப்பட்டது. கருப்பின மக்களை அடிமை வியாபாரம் செய்தவனின் சிலை இங்கு இருக்கக் கூடாது. இங்கிலாந்து அரசு அடிமைத்தனத்துடனான அவரது தொடர்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பல போராட்டக்குழுக்கள் பல ஆண்டுகளாக வாதிட்டனர். . கடந்த வாரத்தில் கூட ஆயிரக்கணக்கான கையெழுத்துக்களை சேகரித்து அவருக்கு நகரத்தில் "இடமில்லை" என்று கூறிய ஒரு மனு அளிக்கப்பட்டது.

ஆனால் அரசு சிலை அகற்றுவது குறித்து எந்த முடிவுகளையும் பரிசோதிக்காததால், நேற்றைய தினம் பிரிஸ்டல் அருங்காட்சியகம் பகுதியில் எட்வர்ட் கோல்ஸ்டனின் சிலை முன்பு கூடிய போராட்டக்காரர்கள் சிலையை சேப்படுத்தினர். மேலும் ஒருகட்டத்தில் போராட்டக்காரர்கள் எட்வர்ட் கோல்ஸ்டனின் வெண்கல சிலையை கயிற்றால் கட்டி, அதைச் சுற்றியுள்ள கூட்டத்தினரின் ஆரவாரங்களுடன் சிலையைக் கவிழ்த்தனர்.

பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலையை அருகிலுள்ள துறைமுகத்திற்கு உருட்டிக்கொண்டு அவான் நதியில் வீசினர். அப்போது Black Lives Matter போராட்டக்காரர்கள் கருப்பின மக்களுக்கு ஆதரவாகவும் நிறவெறிக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். இந்த சம்பவம் எதிர்ப்பாளர்களிடையே பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்திய நிலையில், உள்ளூர் போலிஸார் இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கியுள்ளனர்.

10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிலை கவிழ்ப்புப் போராட்டத்தில் கலந்துக்கொண்டதால் அவர்களை அடையாளும் காணும் பணியில் போலிஸார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இங்கிலாத்து முழுவதும் Black Lives Matter தீவிரமடைந்து வருகிறது. சிலை கவிழ்ப்பு நடவடிக்கைக்கு பலரும் ஆதரவு அளித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories