உலகம்

தொண்டு நிறுவனம் மூலம் ஏழை மக்களுக்கு உதவி - பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடிக்கு கொரோனா!

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொண்டு நிறுவனம் மூலம் ஏழை மக்களுக்கு உதவி - பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடிக்கு கொரோனா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் பல முன்னணி பிரலங்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் மூடங்கி போயியுள்ளனர். அப்படியும் சில சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவி செய்து வந்தார்.

அந்தவகையில், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி பாகிஸ்தானில் உள்ள ஏழை மக்களுக்கு உணவு, தேவையான பொருட்கள் மற்றும் முக கவசம் வழங்கி வந்தார். பல்வேறு தரப்பினரும் ஷாகித் அப்ரிடி இந்த சேவை முயற்சிக்கு தங்கள் உதவியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

இந்நிலையில் கடும் உடல் வலியால் அவதிப்பட்ட வந்த அப்ரிடிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால், சிறிது நேரத்தில் அப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “வியாழக்கிழமை முதல் எனக்கு உடல்நிலை சரியில்லை. உடல்வலி கடுமையாக இருந்தது. மருத்துவர்கள் எனக்குப் பரிசோதனை நடத்தியதில் எனக்கு கொரோனா தொற்று உறுதியானது” எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகும் மூன்றாவது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி ஆவார். முன்னதாக முன்னாள் வீரர்கள் தௌபீக் உமர் மற்றும் சபார் சர்பராஸ் ஆகியோர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகினர்.

banner

Related Stories

Related Stories