உலகம்

“3.29 லட்சத்தைக் கடந்த உயிர்பலி - 50 லட்சம் பேருக்கு பாதிப்பு” : உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3.29 லட்சத்தை தாண்டியது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.

கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. இன்னும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு தொடர்கிறது. உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 5,088,473 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 329,772 அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர்.

அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 1,591,991 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்து ரஷ்யாவில் 308,705 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்குகிறது. பலியானோர் எண்ணிக்கை 3303 ஆக அதிகரித்துள்ளது.

“3.29 லட்சத்தைக் கடந்த உயிர்பலி - 50 லட்சம் பேருக்கு பாதிப்பு” : உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா!

கொரோனா தொற்றால் அமெரிக்காவில் 94,994 பேர் பலியாகினர். பிரிட்டனில் 35,704 பேர் பலியாகி உள்ளனர். பிரான்ஸில் 28,132 பேரும், ஸ்பெயினில் 27,888 பேரும் பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் சுமார் 2,023,449 பேர் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். என்று தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories