உலகம்

“மக்களை பேரழிவுக்குத் தள்ளி, நாட்டை சவக்காடாக்குகிறார் ட்ரம்ப்” - ஒபாமா பகிரங்க குற்றச்சாட்டு! #Corona

அதிபர் ட்ரம்புக்கு கொரோனாவை கட்டுப்படுத்தவே தெரியவில்லை என முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா சாடியுள்ளார்.

“மக்களை பேரழிவுக்குத் தள்ளி, நாட்டை சவக்காடாக்குகிறார் ட்ரம்ப்” - ஒபாமா பகிரங்க குற்றச்சாட்டு! #Corona
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சீனாவில் உருவான இந்த வைரஸ் தாக்குதல் உலகின் 180க்கும் மேலான நாடுகளில் பரவி புரட்டி எடுத்து வருகிறது. அதில் அதி முக்கியமாக கொரோனாவின் கோரோரத் தாண்டவத்தின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது அமெரிக்கா.

உலக அளவில் 41 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் அதாவது 13 லட்சத்துக்கும் அதிகமானோர் அமெரிக்காவில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அதில், பலி எண்ணிக்கை மட்டுமே 80 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதன் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் கோடிக் கணக்கான அமெரிக்கர்கள் வேலையை இழந்து செய்வதறியாது திணறி வருகின்றனர். மேலும், அதிபர் ட்ரம்பின் கொரோனா தடுப்பு செயல்பாடுகள் எதுவும் எடுபடவில்லை. மருத்துவ உளவுத்துறை, அதிகாரிகள் என பலரும் எச்சரித்த போதும் மிகவும் அலட்சியமாகவே இருக்கிறார் அதிபர் டோனால்ட் ட்ரம்ப்.

“மக்களை பேரழிவுக்குத் தள்ளி, நாட்டை சவக்காடாக்குகிறார் ட்ரம்ப்” - ஒபாமா பகிரங்க குற்றச்சாட்டு! #Corona

இந்த நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தன்னுடன் பணியாற்றிய அதிகாரிகளுடன் நேற்று அரை மணிநேரம் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடி, ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, ட்ரம்பின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சிக்கவும் செய்துள்ளார்.

அதில், கொரோனா வைரஸ் தடுக்கும் வழிகள் ஏதும் டோனால்ட் ட்ரம்புக்கு தெரியவில்லை. நோயைக் கட்டுப்படுத்தத் தெரியாமல் மக்களை பேரழிவை நோக்கி தள்ளியுள்ளார். ஒரு குழப்பத்தை மறைப்பதற்காக பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறார் ட்ரம்ப். நாட்டை சவக்காடாக மாற்றுவதோடு, பிரிவினை நோக்குடனும் அதிபர் ட்ரம்ப் செயல்படுகிறார் என பகிரங்கமாக பாரக் ஒபாமா சாடியுள்ளார்.

முன்னதாக, ட்ரம்பின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் ஒரு நல்ல அரசை மோசமான அளவுக்கு சித்தரிக்கும் வகையில் இட்டுச் சென்றுள்ளது. உலக நாடுகள் நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறது என்பதை ட்ரம்ப் அரசு உணர வேண்டும். இவரை அனைத்தும் நவம்பர் மாதத்தில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் வெளிப்படும் என்றும் ஒபாமா கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories